தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Romantic Movie: காதல் ரசம் சொட்ட சொட்ட ஒரு ஹாலிவுட் படம்.. அமேசான் பிரைமில் இருக்கு!

Romantic Movie: காதல் ரசம் சொட்ட சொட்ட ஒரு ஹாலிவுட் படம்.. அமேசான் பிரைமில் இருக்கு!

Manigandan K T HT Tamil

Sep 09, 2024, 04:02 PM IST

google News
Amazon Prime: அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு, கண்காணிக்க ஒரு நபரை நியமிக்கிறார். இதற்கிடையே, பெர்ரி டைசனுக்கு சர்க்கஸ் குழுவுடன் மோதல் நேர அப்போது அங்கு வரும் ஏப்ரல் டெலோங்ப்ரே அவரை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார்.
Amazon Prime: அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு, கண்காணிக்க ஒரு நபரை நியமிக்கிறார். இதற்கிடையே, பெர்ரி டைசனுக்கு சர்க்கஸ் குழுவுடன் மோதல் நேர அப்போது அங்கு வரும் ஏப்ரல் டெலோங்ப்ரே அவரை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார்.

Amazon Prime: அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு, கண்காணிக்க ஒரு நபரை நியமிக்கிறார். இதற்கிடையே, பெர்ரி டைசனுக்கு சர்க்கஸ் குழுவுடன் மோதல் நேர அப்போது அங்கு வரும் ஏப்ரல் டெலோங்ப்ரே அவரை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார்.

HT OTT SPECIAL: டூ மூன் ஜங்ஷன் என்பது 1988 ஆம் ஆண்டு சல்மான் கிங் இயக்கிய அமெரிக்கத் திரைப்படமாகும். இது Southern Gothic பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள ரொமான்டிக் திரைப்படம் ஆகும். ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் சர்க்கஸில் பணிபுரியும் இளைஞரை காதலிப்பதால் நிகழும் பிரச்சனைகளை சுற்றி கதை சுழல்கிறது. காதல் மற்றும் சமூகக் கட்டுப்பாடுகள் போன்ற கருப்பொருள்களை ஆராய்வதற்காக இந்தத் திரைப்படம் குறிப்பிடத்தக்கது. மேலும் இது டிராமா மற்றும் ரொமான்ஸ் காட்சிகளின் கலவையைக் கொண்டுள்ளது. கதை அமைப்பும் கதாபாத்திரங்களும் மனதில் நிற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது ரொமான்டிக் படங்களின் வரிசையில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பெற்றுள்ளது. இந்தப் படத்துக்கு ஜொனாதன் எலியாஸ் இசையமைத்துள்ளார்.

கதை என்ன?

ஏப்ரல் டெலோங்ப்ரே ஒரு பணக்கார குடும்பத்தின் மூத்த மகள் மற்றும் மரியாதைக்குரிய குடும்பத்தின் வாரிசு ஆவார். கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, ஏப்ரல் டெலோங்ப்ரே தனது வருங்கால கணவரான சாட் டக்ளஸ் ஃபேர்சைல்ட் உடனான தனது திருமணத்திற்கு தயார் ஆவதற்காக தனது பெற்றோரின் வீட்டிற்குத் திரும்புகிறார். ஒரு சர்க்கஸ் நடத்தும் குழு நகரத்திற்கு வரும்போது, ​​ பெர்ரி டைசன் என்பவரைப் பார்த்து காதல் வயப்படுகிறார். அதைத் தொடர்ந்து இருவருக்கு காதல் பற்றிக் கொள்கிறது.

அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் கொள்ளும் பாட்டி, கண்காணிக்க ஒரு நபரை நியமிக்கிறார். இதற்கிடையே, பெர்ரி டைசனுக்கு சர்க்கஸ் குழுவுடன் மோதல் நேர அப்போது அங்கு வரும் ஏப்ரல் டெலோங்ப்ரே அவரை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார். இருவருக்கும் இடையே சில சமயங்களில் சண்டை சச்சரவுகள் வருகிறது. ஆனாலும், அவர்களின் காதல் மட்டும் குறையாமல் மீண்டும் இணைகின்றனர்.

மெதுவாக நகரும் திரைக்கதை

அதேநேரம் அவருக்கு திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. காதலிப்பவரை மணந்தாரா, அல்லது வீட்டில் பார்த்த பையனை திருமணம் செய்து கொள்கிறாரா என்பது தான் மீதிப் படம். 

மிகவும் மெதுவாக நகரும் திரைக்கதை படத்தைப் பார்க்கும்போது தொய்வை தருகிறது. கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி முழுவதும் படத்தின் ஷூட்டிங் நடந்திருக்கிறது.

இந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, ரிட்டர்ன் டு மூன் ஜங்ஷன் என்ற ஒரு sequel படமும் வெளியானது. லூயிஸ் பிளெட்சர் மட்டுமே அதன் தொடர்ச்சியில் மீண்டும் ஒரு பாத்திரத்தில் நடித்தார்.

ரொமான்டிக் காட்சிகள் அதிகம் இருக்கின்றன. எனவே, இந்தப் படத்தை குடும்பத்துடன் பார்க்க முடியாது. அமேசான் பிரைமில் இந்தப் படம் காணக் கிடைக்கிறது. படத்திற்கான தலைப்புக்கான அர்த்தம் படத்தை பார்த்து முடித்ததும் புரியும்.

1988 கோல்டன் ராஸ்பெர்ரி விருதுகள் விழாவில் பங்கு பெற்ற இந்தப் படம் சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றது. அந்த விருதை Kristy McNichol பெற்றார்.

இந்தப் படத்தில் நடித்த கதாநாயகி, ஷெரிலின் ஃபென், ட்வின் பீக்ஸ் (1990-1991, 2017) என்ற தொலைக்காட்சி தொடரில் கற்பனை கதாபாத்திரமான ஆட்ரி ஹார்னாக நடித்தார், அதற்காக அவர் கோல்டன் குளோப் விருது மற்றும் எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

அவர் வைல்ட் அட் ஹார்ட் (1990), ஆஃப் மைஸ் அண்ட் மென் (1992), பாக்ஸிங் ஹெலினா (1993) மற்றும் தி யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் லேலண்ட் (2003) ஆகிய திரைப்படங்களிலும் நடித்தார், மேலும் ரூட் அவேக்கனிங் (1998-2001), ஷேம்லெஸ் என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்தார். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி