தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சூப்பரோ சூப்பர் ஜாக்பாட்.. சுக்கிரன் ஏப்ரல் பண மழை.. இனி அசைக்க முடியாத ராசிகள் இவர்கள்தான்

சூப்பரோ சூப்பர் ஜாக்பாட்.. சுக்கிரன் ஏப்ரல் பண மழை.. இனி அசைக்க முடியாத ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 26, 2024 02:09 PM IST

Venus Transit: சுக்கிர பகவானின் மேஷ ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகின்றனர்.

சுக்கிரன்
சுக்கிரன்

சுக்கிர பகவான் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசியில் நுழைந்தார். இவருடைய மேஷ ராசி பயணம் மே 19ஆம் தேதி வரை நீடிக்கின்றது. அதற்கு பிறகு தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்கு செல்கிறார். ஏற்கனவே மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு சுக்கிரன் இணைந்துள்ளார்.

சுக்கிர பகவானின் மேஷ ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசிகள் சுக்கிரன் முதல் வீட்டில் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கூட்டு வியாபாரம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

ரிஷப ராசி

 

உங்கள் ரசிகர்கள் 12-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். நிறைய செலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். நண்பர்களால் உதவி கிடைக்கும். விருதுநர்களால் முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர செலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த காலம் உங்களுக்கு சாதகமாக அமையும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களிடம் பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்படும். காதல் வாழ்க்கையின் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

கடக ராசி

 

சுக்கிரன் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel