தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நடிப்பில் பின்னி பெடல் எடுத்த விஜயகாந்த்.. 150 நாட்களை கடந்து ஓடி மாபெரும் வெற்றி.. 33 ஆம் ஆண்டில் மாநகர காவல்!

நடிப்பில் பின்னி பெடல் எடுத்த விஜயகாந்த்.. 150 நாட்களை கடந்து ஓடி மாபெரும் வெற்றி.. 33 ஆம் ஆண்டில் மாநகர காவல்!

Divya Sekar HT Tamil

Jun 28, 2024, 05:00 AM IST

google News
33 Years Of Maanagara Kaaval : 150 நாட்களை கடந்து ஓடி மாபெரும் வெற்றி கண்ட இப்படம் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகள் ஆகிறது. இதில் என்ன ஒரு சோகம் என்றால் தற்போது இப்படத்தின் நாயகன் விஜயகாந்த், இயக்குனர் தியாகராஜன் இருவரும் இல்லை என்பதே.
33 Years Of Maanagara Kaaval : 150 நாட்களை கடந்து ஓடி மாபெரும் வெற்றி கண்ட இப்படம் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகள் ஆகிறது. இதில் என்ன ஒரு சோகம் என்றால் தற்போது இப்படத்தின் நாயகன் விஜயகாந்த், இயக்குனர் தியாகராஜன் இருவரும் இல்லை என்பதே.

33 Years Of Maanagara Kaaval : 150 நாட்களை கடந்து ஓடி மாபெரும் வெற்றி கண்ட இப்படம் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகள் ஆகிறது. இதில் என்ன ஒரு சோகம் என்றால் தற்போது இப்படத்தின் நாயகன் விஜயகாந்த், இயக்குனர் தியாகராஜன் இருவரும் இல்லை என்பதே.

மாநகர காவல் திரைப்படம் விஜயகாந்தின் சினிமா பயணத்திற்கு திருப்பு முனையை ஏற்படுத்திய படம் என்று சொல்லலாம். இதில் விஜயகாந்த் இந்தியப் பிரதமரைப் படுகொலையிலிருந்து காப்பாற்றும் காவல்துறை அதிகாரியாக நடித்து அசத்தி இருப்பார். இப்படத்தில் ஆனந்த்ராஜ், சுமா, நாசர், லட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர்.

விஜய்காந்தின் சினிமா கேரியரில்  ஹிட்டடித்த படங்களில் முக்கியமான திரைப்படம் ‘மாநகர காவல்’. 1991ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி வெளியான இந்தத்திரைப்படத்தை இயக்குநர் தியாகராஜன் இயக்கி இருந்தார்.

காவல்துறை அதிகாரியாக விஜய்காந்த்

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் இந்தப்படத்தை தயாரித்திருந்தது. காவல்துறை அதிகாரியாக விஜய்காந்த் நடித்திருந்த இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுமா நடித்திருந்தார்.

இப்படத்தில், ஏசிபி சுபாஷ் ஐபிஎஸ் ஆக விஜயகாந்த் நடித்து இருப்பார். அதேபோல வித்யாவாக சுமன் ரங்கநாதன் நடித்து இருப்பார். எம்.என்.நம்பியார் ஐ.ஜி ஜெயபிரகாஷ் ஆகவும்,பி.எம்.ரூபவதியாக லட்சுமி ஆகவும், கௌதம் ஐபிஎஸ் ஆக நாசரும், சீதையாக வைஷ்ணவியும், ராபினாக ஆனந்தராஜூம்,அசோக் மேத்தாவாக பிஜே சர்மாவும் நடித்து இருப்பார்.

நடிப்பில் பின்னி பெடல் எடுத்த விஜயகாந்த்

இந்திய நாட்டு பிரதமராக வரும் லட்சுமியை படுகொலையில் இருந்து விஜய்காந்த் காப்பாற்றினாரா? இல்லையா என்பதுதான் படத்தின் ஒன் லைன். காவல் அதிகாரி வேடம் என்றால் விஜயகாந்திற்கு சொல்லவா வேண்டும். நடை, உடை, பாவனை, வசன உச்சரிப்பு என அனைத்திலும் தனக்கே உரித்தான பாணியில் நடிப்பில் பின்னி பெடல் எடுத்தார். 

குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகள் ஒவ்வொன்றும் தெறி ரகமாய் அமைந்திருந்தது. படத்தின் ஒரு ஹீரோ விஜய்காந்த் என்றால் இன்னொரு ஹீரோ படத்தின் இசையமைப்பாளர் சந்திர போஸ். அவர் படத்திற்கு போட்ட பின்னணி அனைத்துமே காட்சிகளை வேற ரேஞ்சிற்கு உயர்ந்திருந்தது. குறிப்பாக விஜய்காந்த் அறிமுகமாகும் காட்சி மாஸ் ரகம். படத்தில் தன்னுடைய அக்மார்க் வில்லத்தனத்தால் மிரட்டு மிரட்டு என மிரட்டியிருப்பார் நடிகர் ஆனந்த் ராஜ்.

150 நாட்களை கடந்து ஓடி மாபெரும் வெற்றி

கேப்டன் பிரபாகரனிற்கு பிறகு விஜயகாந்திற்கு வெளியான இந்தத்திரைப்படம் 150 நாட்களை கடந்து ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. ‘சிட்டி போலீஸ்’ தெலுங்கிலும் பெயரில் இந்தப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இதன் மூலம் தெலுங்கிலும் மார்க்கெட்டை பிடித்தார் விஜய்காந்த். பாடல்கள் அனைத்தையுமே கவிஞர் வாலி எழுதியிருந்தார்.

இப்படத்தில் இடம்பெற்ற”வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை

இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை

சண்டித்தனம் செய்யலாமா குதுர

சாட்டையுடன் நிக்கிறப்ப எதிரே

சிந்திக்கிது அச்சம்பட்டு குதுர

ஓ பொண்ண போலத்தான்

பூவை போலத்தான்

கட்டிக்காப்பவன் நான்தான் நான்தான்” இப்பாடல் செம ஹிட். 

கடைசி காலங்களில் கஷ்டபட்ட தியாகராஜன்

இந்தப்படத்தை இயக்கிய தியாகராஜன் கடைசி காலங்களில் வறுமையில் மிகவும் கஷ்டப்பட்டார். சென்னை மாநகர தெருக்களில் வறுமையில் அநாதையாக அலைந்து திரிந்த இவர் ஏவிஎம் நிறுவனத்திற்கு எதிரில் தெருவில் விழுந்து இறந்து கிடந்தது நெஞ்சடைக்கும் சோகம்.

150 நாட்களை கடந்து ஓடி மாபெரும் வெற்றி கண்ட இப்படம் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகள் ஆகிறது. இதில் என்ன ஒரு சோகம் என்றால் தற்போது இப்படத்தின் நாயகன் விஜயகாந்த், இயக்குனர் தியாகராஜன் இருவரும் இல்லை என்பதே. இவர்கள் மறைந்தாலும் இவர்களின் இந்த திரைப்படம் எப்போதும் அவர்களை நினைவுகூறும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி