தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Snehan: வரிகளில் புதுமை.. பாடல்கள் வெற்றி.. தமிழ் சினிமாவின் கவிஞர்.. பாடலாசிரியர் சினேகன் பிறந்தநாள்

HBD Snehan: வரிகளில் புதுமை.. பாடல்கள் வெற்றி.. தமிழ் சினிமாவின் கவிஞர்.. பாடலாசிரியர் சினேகன் பிறந்தநாள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 23, 2024 06:09 AM IST

HBD Snehan: எந்த காலத்திற்கும் ஏற்றார் போல எழுதக்கூடிய திறன் கொண்ட கவிஞர்களில் சினேகனும் ஒருவர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கக்கூடிய விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, கார்த்தி உள்ளிட்டவர்களுக்கு பல பாடல்களை கவிஞர் சினேகன் எழுதி ஹிட்டாகியுள்ளது.

வரிகளில் புதுமை.. பாடல்கள் வெற்றி.. தமிழ் சினிமாவின் கவிஞர்.. பாடலாசிரியர் சினேகன் பிறந்தநாள்
வரிகளில் புதுமை.. பாடல்கள் வெற்றி.. தமிழ் சினிமாவின் கவிஞர்.. பாடலாசிரியர் சினேகன் பிறந்தநாள்

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த அளவிற்கு பாடல்களில் இடம் பெறக்கூடிய வரிகளுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் இருந்த வருகின்றன. பல பாடல்களை பட கவிஞர்கள் எழுதி இருந்தாலும் ஒரு சில கவிஞர்கள் மட்டுமே தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகின்றனர். அப்படிப்பட்ட மிகப்பெரிய பட்டியலில் இடம் பிடித்திருக்கக் கூடியவர் கவிஞர் சினேகன்.

தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய எத்தனையோ முன்னணி நடிகர்களுக்கு பல வெற்றி பாடல்களை எழுதி கொடுத்து இருக்கிறார் இவர். புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது பயணத்தை தொடங்கி இருக்கிறார். அன்று தொடங்கி இவரது பயணம் சூரரைப் போற்றி திரைப்படத்தில் காட்டுப் பயலே என்ற பாடல் வரை ஓயாமல் உழைத்து வருகிறார்.

எந்த காலத்திற்கும் ஏற்றார் போல எழுதக்கூடிய திறன் கொண்ட கவிஞர்களில் சினேகனும் ஒருவர். கதை, சூழ்நிலை என அனைத்திற்கும் ஏற்றார் போல எழுதக்கூடியவர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கக்கூடிய விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, கார்த்தி உள்ளிட்டவர்களுக்கு பல பாடல்களை கவிஞர் சினேகன் எழுதி ஹிட்டாகியுள்ளது.

முதன் முதலாக இவர் பாடலாசிரியராக அறிமுகமான புத்தம் புது பூவே திரைப்படம் இவருக்கு சரியான அங்கீகாரத்தை கொடுக்கவில்லை. அதற்குப் பிறகு இயக்குனர் சேரன் இயக்கிய பாண்டவர் பூமி திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய தொடக்கத்தை இவர் பெற்றார்.

தோழா தோழா தோள் கொடு கொஞ்சம், அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் என்ற பாடல்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. பாண்டவர் பூமி திரைப்படம் தான் இவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தது என்று கூறினால் அது மிகையாகாது.

ஹீரோ பயணம்

பாடலாசிரியராக விளம்பர தொடங்கிய கவிஞர் சினேகன் திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். அமீர் நடித்த யோகி திரைப்படத்தில் இவர் அவருடன் இணைந்து நடித்துள்ளார். உயர்திரு 420 என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக தனது பாதையை தொடங்கினார்.

பிக்பாஸ்

சினிமாவில் இவருடைய பயணம் ஒரு பக்கம் செல்ல மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக கொண்டாடப்படும் பிக் பாஸ் ஷோவில் இவர் கலந்து கொண்டார். பிக் பாஸில் பங்கேற்பாளராக கலந்து கொண்டு பலரின் மனதை வென்று தனது சிறப்பான திறமையால் ரன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் சீசனில் ரன்னராக வெற்றி பெற்றவர் கவிஞர் சினேகன்.

அரசியல் பயணம்

சினிமா துறை மட்டுமல்லாது அரசியல் துறையிலும் தனது காலடியை பதித்தார். 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசன் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக போட்டியிட்டார். 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதே கட்சியின் சார்பில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார்.

இவ்வாறு அரசியல்வாதி பாடலாசிரியர் நடிகர் என பல பரிமாணங்களைக் கொண்டவர். பல பாடல்கள் மூலம் நம் அனைவரின் மனங்களையும் கொள்ளை அடித்தவர் கவிஞர் சினேகன். இவர் இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஜூன் 23ஆம் தேதியான இன்று சினேகன் அவரது பிறந்தநாளை கொண்டாடி வரும் வேளையில் அவரது ரசிகர்கள் திரை பிரபலங்கள் என அனைவருடனும் சேர்ந்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் கவிஞர் சினேகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.