Exit polls 2024: உத்தர பிரதேசத்தில் உச்சம் பெறும் பாஜக! பூஜ்ஜியம் ஆகும் மாயாவதி! இந்தியா கூட்டணிக்கு எவ்வளவு தெரியுமா?
Jun 01, 2024, 10:17 PM IST
Exit Polls 2024: 2019 மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கூடுதல் இடங்களை பெறலாம் என கருத்து கணிப்புகள் தெரிவித்து உள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலில் உத்தர பிரதேசம் மாநிலத்தில் 69 முதல் 74 இடங்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றும் என்று கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்து உள்ளது.
2019ஐ விட கூடுதல் இடங்களை வெல்லும்
18வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 2019 தேர்தலுடன் ஒப்பிடும்போது உத்தரப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்று இன்று வெளியான தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் தெரிக்கப்பட்டு உள்ளது.
80 உறுப்பினர்களை நாடாளுமன்றத்தின் கீழ்சபைக்கு அனுப்பும் உத்தரப் பிரதேசத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி 69 முதல் 74 இடங்களை வெல்லும் என்றும், இந்தியக் கூட்டணிக்கு 6 முதல் 11 இடங்களைப் பெறும் என்றும் ரிப்பப்ளிக் பாரத்-மேட்ரைஸ் கருத்து கணிப்பு தெரிவித்து உள்ளது.
பூஜ்ஜியத்தில் முடங்கும் மாயாவதியின் கட்சி
பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் இருந்து விலகிய பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) லோக்சபா தேர்தலில் எந்த இடங்களையும் பெறாது என்றும் தெரிவித்தது.
இதற்கிடையில், உத்தரபிரதேசத்தில் பாஜக தலைமையிலான என்டிஏ 68 முதல் 74 இடங்கள் வரை வெற்றிபெற வாய்ப்புள்ளதாக என்டிடிவி-ஜன் கி பாத் கணித்துள்ளது. இருப்பினும், இந்தியா கூட்டணிக்கு 12 முதல் 16 இடங்களையும் வழங்கியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி எந்த இடங்களிலும் வெற்றி பெறாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா கூட்டணி கள நிலவரம்
இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி இடையே கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி என்று தங்களது தொகுதி உடன்படிக்கையை செய்து கொண்டன. இதன்படி மொத்தமுள்ள 80 நாடாளு மன்றத் தொகுதிகளில் 17 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
India News-D-Dynamics கருத்து கணிப்பின்படி உத்தரப்பிரதேசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 69 இடங்களில் வெல்லும் என்று கணித்துள்ளது. இந்தியா கூட்டணி 11 இடங்களைக் கைப்பற்றும் என்றும், பகுஜன் சமாஜ் கட்சி பூஜ்ஜியத்தைப் பெறலாம் என்றும் கணித்துள்ளது.
நியூஸ் நேஷன் எக்ஸிட் போல், என்.டி.ஏ கூட்டணி 67 இடங்களை பெறாலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் இந்தியா கூட்டணி 11 இடங்களை வெல்லும் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி எந்த இடங்களையும் பெறாது என்றும் கூறி உள்ளது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 80 இடங்களில் பாஜக 62 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 5 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்தையும் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத் தேர்தல் 2024:
இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடந்து முடிந்தது.
இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் கடந்த மே 7ஆம் தேதியும், மே 13ஆம் தேதி அன்று நான்காம் கட்ட தேர்தலும் நடந்து முடிந்தது.
வரும் மே 20ஆம் தேதி அன்று 5ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவும், மே 25ஆம் தேதி அன்று 6ஆம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்ற முடிந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதியான இன்று இறுதி கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்து உள்ளது. வரும் ஜூன் 4ஆம் தேதி அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
டாபிக்ஸ்