Lok Sabha polls: 6ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் 59% வாக்குகள் பதிவு! அடித்து தூக்கிய மேற்கு வங்கம்!
Lok Sabha polls: ஆறாவது கட்ட வாக்குப்பதிவில் ஆறு மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் 58.82% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Lok Sabha polls: 6ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் 59% வாக்குகள் பதிவு! அடித்து தூக்கிய மேற்கு வங்கம்! (AFP)
நாட்டின் பல பகுதிகளில் கொளுத்தும் வெப்ப அலைகளுக்கு மத்தியில் கடும் போட்டி நிறைந்த லோக்சபா தேர்தலில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் வாக்களித்தனர். நாடு முழுவதும் உள்ள ஆறு மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் நடைபெற்ற 6ஆம் கட்ட வாக்குப்பதிவில் 58 தொகுதிகளில் 58.82 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
மேற்கு வங்க மாநில வாக்குப்பதிவு நிலவரம்
மேற்கு வங்கத்தில் 78 சதவீததிற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளது. அதே சமயம் பீகார் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில் தலா 52.80% மற்றும் 54.02% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தனது செயலியில் அறிவித்து உள்ளது.
டெல்லி வாக்குப்பதிவு நிலவரம்
டெல்லியில் 54.32% வாக்குகளும், ஹரியானாவில் 58.06%, ஒடிசாவில் 59.72%, ஜார்க்கண்டில் 62.13% வாக்குகளும் பதிவாகி உள்ளன.