தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Election 2024: வாக்கு சாவடிகளில் செல்போன் எடுத்து செல்ல கூடாது! ஓட்டு போட போறீங்களா! இத பாலோ பண்ணுங்க!

Election 2024: வாக்கு சாவடிகளில் செல்போன் எடுத்து செல்ல கூடாது! ஓட்டு போட போறீங்களா! இத பாலோ பண்ணுங்க!

Kathiravan V HT Tamil

Apr 18, 2024, 04:17 PM IST

google News
“10.92 லட்சம் முதல்முறை வாக்காளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். 4.61 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். 85 வயதிற்கு மேற்பட்டவர்களில் 6.1 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்”
“10.92 லட்சம் முதல்முறை வாக்காளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். 4.61 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். 85 வயதிற்கு மேற்பட்டவர்களில் 6.1 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்”

“10.92 லட்சம் முதல்முறை வாக்காளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். 4.61 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். 85 வயதிற்கு மேற்பட்டவர்களில் 6.1 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்”

நாளை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இறுதியாக வரும் வாக்காளர்களுக்கு சீட்டு கொடுத்து வரிசையில் நிற்பவரின் அனைத்து வாக்குகளும் பதிவு செய்யப்படும். 

இந்தியா முழுவதும் வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. 68321 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளது. 39 வாக்கு எண்ணும் மையங்கள் உள்ளது. 

10.92 லட்சம் முதல்முறை வாக்காளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். 4.61 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். 85 வயதிற்கு மேற்பட்டவர்களில் 6.1 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 

வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பணியாளர்களுக்கு இதுவரை மூன்று முறை பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளது. 

950 வேட்பாளர்கள் தமிழ்நாட்டில் வேட்பாளர்களாக போட்டியில் உள்ளனர். இதில் 874 பேர் ஆண்கள் மற்றும்  76 பெண்கள் ஆவார். 

119 கம்பெனி மத்திய பாதுகாப்பு படைகள் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். தேர்தல் முடிந்த பிறகு 15 கம்பெனி சி.ஏ.பி.எஃப் படையினர் ஈவிஎம் இயந்திரங்கள் பாதுகாப்புக்காக வைக்க உள்ளோம். 

850 வாக்குசாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்கு சாவடிகளாகவும். 181 வாக்கு சாவடிகள் அதிக பதற்றம் நிறைந்த வாக்கு சாவடிகளாகவும் அடையாளம் காணப்பட்டு உள்ளது. 

இதுவரை நேற்று காலை 9 மணி வரை 173.85 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 6.67 கோடி மதிப்புள்ள மது புட்டிகள், 1.13 கோடி அரிய உலோகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.  

இதுவரை 4861 புகார்கள் தேர்தல் ஆணையத்திற்கு வந்துள்ளனதுல் அதில் 22 புகார்கள் மட்டும் நிலுவையில் உள்ளது. 

27-3-2024 வரை விண்ணப்பித்து உள்ள அனைவருக்கும் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை அனுப்பப்பட்டு உள்ளது. 

புகைப்பட வாக்காளர் அட்டை இருந்தால் மட்டும்தான் ஓட்டு போட முடியும் என்பது அல்ல, அதற்கு நிகரான ஓட்டுநர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான் அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை கொண்டு வாக்கு அளிக்கலாம். 

தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த 2009ஆம் ஆண்டு 73.02 சதவீதமும், 2014ஆம் ஆண்டில் 73.74 சதவீதமும்,  2019ஆம் ஆண்டில் 72.47 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளது. 

தேர்தலுக்காக ஒரு லட்சம் காவலர்கள் காவல் பணிகளில் ஈடுபட உள்ளனர். 12 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்களும், 1931 முன்னாள் காவல் துறையினரும், 3500 வெளிமாநில ஆயுத படையினர் என மொத்தம் 1.3 லட்சம் பேர் காவல் பணிகளில் ஈடுபட உள்ளனர். 

44801 வாக்குப்பதிவு மையங்களில்  வெப் டெலிகாஸ் செய்து லைவ் செய்ய உள்ளோம். மாற்றுத்திறனாளிகள் வாக்கு அளிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளோம். முதியோர், கர்பிணிகளுக்கு உதவ தன்னார்வளர்களை நியனம் செய்து உள்ளோம். 

85 வயதிற்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்க வேண்டும் என்றால் 1950 எண்ணில் போன் செய்து வாகனம் கேட்டால் அதற்கான வசதிகள் செய்து தரப்படும். பணப்பட்டுவாடா பற்றிய புகார்களை அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்த செய்தி