தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Priyanka Gandhi: ’வரம்பற்ற அதிகாரத்தால் பிரதமர் மோடிக்கு திமிர் பிடித்துவிட்டது!’ பிரியங்கா காந்தி விளாசல்!

Priyanka Gandhi: ’வரம்பற்ற அதிகாரத்தால் பிரதமர் மோடிக்கு திமிர் பிடித்துவிட்டது!’ பிரியங்கா காந்தி விளாசல்!

Kathiravan V HT Tamil

May 03, 2024, 09:20 PM IST

”காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் கர்நாடகா, ஹிமாச்சல பிரதேசம், தெலுங்கானாவில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக கூறிய பிரியங்கா காந்தி, நாங்கள் அக்னிவீர் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, ஆயுதப் படைகளுக்கான ஆட்கள் சேர்ப்பில் மீண்டும் பழைய நடைமுறையை கொண்டு வருவோம் என குறிப்பிட்டார்”
”காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் கர்நாடகா, ஹிமாச்சல பிரதேசம், தெலுங்கானாவில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக கூறிய பிரியங்கா காந்தி, நாங்கள் அக்னிவீர் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, ஆயுதப் படைகளுக்கான ஆட்கள் சேர்ப்பில் மீண்டும் பழைய நடைமுறையை கொண்டு வருவோம் என குறிப்பிட்டார்”

”காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் கர்நாடகா, ஹிமாச்சல பிரதேசம், தெலுங்கானாவில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக கூறிய பிரியங்கா காந்தி, நாங்கள் அக்னிவீர் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, ஆயுதப் படைகளுக்கான ஆட்கள் சேர்ப்பில் மீண்டும் பழைய நடைமுறையை கொண்டு வருவோம் என குறிப்பிட்டார்”

வரம்பற்ற அதிகாரத்தால் பிரதமர் நரேந்திர மோடிக்கு திமிர் பிடித்து உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். 

ட்ரெண்டிங் செய்திகள்

Fact Check: ரவீந்திரநாத் தாகூரின் உருவப்படத்தை பிரதமர் மோடி தலைகீழாக வைத்திருந்தாரா?

Mamata Banerjee Vs Modi: ’பாஜக 200ஐ தாண்டாது! இந்தியா கூட்டணி 300ஐ தாண்டும்!’ அடித்து சொல்லும் மம்தா! இதுதான் காரணமாம்!

Modi: கார் இல்லை! நிலம் இல்லை! கடன் இல்லை! பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இதுதான்! மனைவி குறித்தும் மனம் திறந்தார்!

PM Narendra Modi files nomination: வாரணாசி படித்துறையில் ஆரத்தி.. பின்னர் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி

உத்தரப்பிரதேச மாநிலம், ஃபதேபூர் சிக்ரி மக்களவைத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து ஆக்ராவின் ஃபதேஹாபாத் பகுதியில் நடைபெற்ற வாகன பேரணியில் பேசிய பிரியங்கா காந்தி பேசுகையில், மக்கள் பிரச்சனைகளில் இருந்து விலகிய "வரம்பற்ற அதிகாரத்தால்" பிரதமர் நரேந்திர மோடிக்கு திமிர் பிடித்துள்ளதாக கூறினார். பிரதமரைச் சுற்றி இருப்பவர்கள் முகஸ்துதியில் ஈடுபட்டதாகவும், அவரைப் பார்த்து பயப்படுவதாகவும், அதனால் அவருக்கு சரியான கருத்தை தெரிவிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மறுபுறம், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலும், மணிப்பூரில் இருந்து மும்பை வரையிலும் 4,000 கிலோமீட்டர் பயணம் செய்து வெகுஜனத் தலைவராக ராகுல் காந்தி விளங்குவதாக கூறினார்.

ராகுல் காந்தி நேரில் சந்தித்த சாமானியர்கள் சொன்னதன் அடிப்படையில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை தயாரித்தது. இது மக்களைப் பற்றியும் அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பற்றியும் பேசுகிறது. தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவி இது,” என்று பிரியங்கா காந்தி வதேரா கூறினார். 

இந்த தொகுதியில் போட்டியிடும் ராம்நாத் சிகர்வார் நாட்டின் நேர்மையான வேட்பாளர். முன்னாள் ராணுவ வீரரான அவர், அதிகாரம், பண பேராசை கொண்டவர் அல்ல, நாட்டுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பை மட்டுமே விரும்புகிறார்” என்ற பிரியங்கா காந்தி, ஃபதேபூர் சிக்ரியில் உள்ள வாக்காளர்களை, அத்தகைய அர்ப்பணிப்புள்ள மனிதரை தங்கள் பிரதிநிதியாகக் கொண்டிருக்கும் வாய்ப்பை இழக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். 

பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியை, அதிகாரத்தின் காரணமாக, ஆணவமாக மாறியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர் சமூகத்தின் ஏழைகள், தாழ்த்தப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரிடமிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டார். அவரைச் சுற்றியுள்ளவர்கள் பயப்படுகிறார்கள், தேசத்தின் அடிமட்ட உண்மைகளுடன் தொடர்பை இழந்த பிரதமருக்கு உண்மையைத் தெரிவிக்கத் துணியவில்லை, ”என்று அவர் குற்றம்சாட்டினார். 

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் கர்நாடகா, இமாச்சல பிரதேசம், தெலுங்கானாவில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக கூறிய பிரியங்கா காந்தி, நாங்கள் அக்னிவீர் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, ஆயுதப் படைகளுக்கான ஆட்கள் சேர்ப்பில் மீண்டும் பழைய நடைமுறையை கொண்டு வருவோம் என குறிப்பிட்டார். 

"ஒரு மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது, வாக்காளர்கள் புத்திசாலித்தனமாக வாக்களிக்க வேண்டும், மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் எழுப்பப்படும் உணர்ச்சிபூர்வமான பிரச்சினைகளுக்கு விழக்கூடாது" என்று  பிரியங்கா காந்தி கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தல் 2024:

543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறும். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடந்து முடிந்து உள்ளது.

இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், மூன்றாம் கட்ட தேர்தல் வரும் மே 7-ம் தேதியும், நான்காம் கட்ட தேர்தல் மே 13ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே 25-ம் தேதியும், கடைசி மற்றும் 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும் நடைபெற உள்ளது. 

அடுத்த செய்தி