Yogi Adityanath: ’இந்தியாவில் காங்கிரஸ் வென்றால் பாகிஸ்தானில் பட்டாசு வெடிக்கும்!’ யோகி ஆதித்யநாத் ஆவேசம்!
“மோடி - பாஜக வெற்றி பெற்றால் தீபாவளி நாடு முழுவதும் கொண்டாடப்படும், காங்கிரஸ் வெற்றி பெற்றால் பாகிஸ்தானில் கொண்டாட்டங்கள் நடைபெறும். நாட்டு மக்கள் இந்த வேறுபாட்டைப் புரிந்துகொண்டு தேச விரோத சக்திகளை நிராகரிக்க வேண்டும்”

மோடியின் பாஜக வெற்றி பெற்றால் நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்படும், ஆனால் காங்கிரஸ் வென்றால் பாகிஸ்தானில் கொண்டாட்டங்கள் நடைபெறும் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார்.
இந்தியாவின் எதிரிகளிடம் காங்கிரஸ் கட்சியின் கை உள்ளதாக உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டி உள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் மீது கடுமையான விமர்னங்களை முன் வைத்த யோகி ஆதித்யநாத், "காங்கிரஸின் கை தேசத்தின் எதிரிகளுடன் உள்ளது" என்பது இப்போது தெளிவாகி உள்ளதாக கூறினார்.
இம்ரான் கானின் கீழ் பாகிஸ்தானின் அமைச்சரவையில் முன்னாள் அமைச்சராக இருந்த சவுத்ரி ஃபவாத் ஹுசைன், ராகுல் காந்தியின் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாக வெளியான செய்திகளை அடுத்து யோகி ஆதித்யநாத் இவ்வாறு பேசி உள்ளார்.