தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  "வயசு ஆச்சுனா இப்படித்தான்!" - ரோஹித்துக்கு பதிலாக ஹர்திக் கேப்டன்சி பற்றி யுவராஜ் சிங்

"வயசு ஆச்சுனா இப்படித்தான்!" - ரோஹித்துக்கு பதிலாக ஹர்திக் கேப்டன்சி பற்றி யுவராஜ் சிங்

Jan 15, 2024, 12:17 PM IST

google News
பிரான்ஸ்சஸ் கிரிக்கெட்டில் அனுபவ வீரர்களை கழட்டிவிட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பும், பொறுப்பும் வழங்குவது சரியானது தான் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார். (AP)
பிரான்ஸ்சஸ் கிரிக்கெட்டில் அனுபவ வீரர்களை கழட்டிவிட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பும், பொறுப்பும் வழங்குவது சரியானது தான் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

பிரான்ஸ்சஸ் கிரிக்கெட்டில் அனுபவ வீரர்களை கழட்டிவிட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பும், பொறுப்பும் வழங்குவது சரியானது தான் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

கடந்த மாதத்தில், "ஐபிஎல் 2024 தொடரில் புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா" என மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அறிவிப்பு இணையத்தில் மிகப் பெரிய விவாதத்தை கிளப்பியது. இதில், பலரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐபிஎல் 2023 வரை கேப்டனாக இருந்து, அந்த அணிக்கு 5 ஐபிஎல் கோப்பைகளை பெற்று தந்த ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவாக கருத்துகளை பகிர்ந்தனர்.

அத்துடன், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் ஷர்மாவின் சகாப்தம் முடிவடைந்திருப்பதாகவும் தெரிவித்தனர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஹர்திக் பாண்ட்யாவை ட்ரேடிங் செய்து வாங்கியது மும்பை இந்தியன்ஸ்.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டனாக செயல்பட்ட பாண்ட்யா அந்த அணியை வெற்றிகரமாக வழிநடத்தினார். ஐபிஎல் தொடரில் களமிறங்கிய முதல் சீசனிலேயே அந்த அணியை சாம்பியன் பட்டத்தை பெற செய்த பாண்ட்யா, அடுத்த சீசனிலேயே குஜராத் அணியை பைனல் வரை அழைத்து சென்றார்.

இதைதொடர்ந்து ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தது பற்றியும், ரோஹித் ஷர்மா பற்றியும் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் கூறியதாவது: "பிரான்சைஸ் கிரிக்கெட்டை பொறுத்தவரை வயது அதிகமாகும்போது கடினமான சூழ்நிலையை சந்திக்க நேரிடும். அனைத்து அணிகளின் நிர்வாகமும் இளம் வீரரை புரொமோட் செய்யவே விரும்புகின்றன. அதுதான் சரியானதும் கூட. நானும் இதை சந்தித்துள்ளேன்.

இளம் வீரர்கள், அனுபவ வீரர்களுக்கு மாற்றாக இருக்க மாட்டார்கள். ரோஹித்துக்கு மிகப் பெரிய அனுபவம் உள்ளது. அதை அவர் வெளிப்படுத்தியும் உள்ளார். அதே சமயம் அணி நிர்வாகம் நீண்ட கால திட்டத்தையும் சிந்திக்க வேண்டும்"

இவ்வாறு அவர் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி