WPL 2024: அறிமுக போட்டி, முதல் பந்தில் சிக்ஸருடன் பினிஷ்! ஹீரோயின் ஆன சஜ்னா - டெல்லியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்
Feb 24, 2024, 08:21 AM IST
DC Women vs MI Women Result:கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட மகளிர் ப்ரீமியர் லீக் தொடர் அறிமுக போட்டியில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து ஹீரோயினாக மாறியுள்ளார் சஞ்சீவன் சஜ்னா.
மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இரண்டாவது சீசன் கோலாகல விழாவுடன் பெங்களுருவில் இன்று தொடங்கியுள்ளது. இந்த முறையும் 5 அணிகள் தொடரில் பங்கேற்கின்றன.
மகளிர் ப்ரீமியர் லீக் போட்டிகள் பெங்களுரு மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன. இதையடுத்து இந்த சீசனின் முதல் போட்டி டெல்லி கேபிடல்ஸ் மகளிர், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மகளிருக்கு அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
டெல்லி பேட்டிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடு்த்தது.
அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ர் ஆலிஸ் கேப்சி அரைசதமடித்து 75 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக அதிரடியாக பேட் செய்த இந்திய பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 24 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.
அணியின் கேப்டன் மெக் லேனிங் 31 ரன்கள் எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷெபாலி வர்மா 1 ரன்னில் நடையை கட்டினார்.
மும்பை பவுலர்களில் அமெலியா கெர், நாட் ஸ்கிவர்-பிரண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். மும்பை அணியில் 7 பவுலர்கள் பந்து வீசினார்கள்
மும்பை சேஸிங்
172 ரன்களை சேஸ் செய்ய களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் வெற்றி பெற்றது. கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்று இருந்தபோது சிக்ஸரை பறக்க விட்டு அணிக்கு வெற்றியை தேடி தந்தார் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியில் அறிமுக வீராங்கனையான சஞ்சீவன் சஜ்னா.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9