தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Wpl 2024: கார் கண்ணாடியை உடைத்த எலிசா பெர்ரி - வெற்றியுடன் கம்பேக் கொடுத்து கெத்து காட்டும் ஆர்சிபி

WPL 2024: கார் கண்ணாடியை உடைத்த எலிசா பெர்ரி - வெற்றியுடன் கம்பேக் கொடுத்து கெத்து காட்டும் ஆர்சிபி

Mar 04, 2024, 11:55 PM IST

google News
பேட்டிங்கில் அதிரடியும், பவுலிங்கில் நெருக்கடியும் வெளிப்படுத்திய ஆர்சிபி சீசனின் மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. (PTI)
பேட்டிங்கில் அதிரடியும், பவுலிங்கில் நெருக்கடியும் வெளிப்படுத்திய ஆர்சிபி சீசனின் மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

பேட்டிங்கில் அதிரடியும், பவுலிங்கில் நெருக்கடியும் வெளிப்படுத்திய ஆர்சிபி சீசனின் மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் 11வது போட்டி ஆர்சிபி மகளிர் - யுபி வாரியர்ஸ் மகளிர் அணிக்கு எதிராக பெங்களுருவில் நடைபெற்றது. இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றிருந்த நிலையில் இந்த போட்டியில் களமிறங்கியது. இதையடுத்து டாஸ் வென்று யுபி வாரியர்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தது.

ஆர்சிபி அதிரடி ஆட்டம்

முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. யுபி வாரியர்ஸ் பவுலர்களுக்கு எதிராக ஆர்சிபி பேட்டர்கள் அதிரடி ருத்ரதாண்டவம் ஆடினார்கள்.

ஆர்சிபி கேப்டன், ஓபனிங் பேட்டர் ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடித்ததோடு 50 பந்துகளில் 80 ரன்கள் அடித்தார். இவருக்கு அடுத்தபடியாக எலிசா பெர்ரி அரைசதமடித்து 58 ரன்கள் அடித்தார்.

சப்பினேனி மேக்னா 28, ரிச்சா கோஷ் 21 ரன்கள எடுத்தனர்

இமாலய சிக்ஸர் ஒன்றை பறக்க விட்ட பெர்ரி, தொடர் நாயகிக்கு கொடுக்கப்பட இருக்கும் பரிசாக மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியில் பட்டு உடைந்து நொறுங்கியது.

யுபி வாரியர்ஸ் போராடி தோல்வி

மிக பெரிய இலக்கை சேஸ் செய்த யுபி வாரியர்ஸ் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. ஆனால் ஆர்சிபி பவுலர்கள் நெருக்கடி தரும் விதமாக பந்து வீசியதோடு சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனால் யுபி வாரியர்ஸ் பேட்டிங் வரிசை சீர்குலைந்தது. ஓபனரும், அணியின் கேப்டனுமான அலிசா ஹீலி மடடும் நிலைத்து நின்று பேட் செய்து அரைசதமடித்தார். 38 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அவர் அவுட்டானார்.

இவருக்கு அடுத்தபடியாக லோயர் ஆர்டரில் பேட் செய்த தீப்தி ஷர்மா 33, பூனம் கெம்னர் 31 ரன்கள் அடித்து வெற்றிக்கா போராடினர்.

ஆனாலும் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்த யுபி வாரியர்ஸ் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஆர்சிபி பவுலர்களில் சோபி டெவின், சோஃபி மோலினெக்ஸ், ஜார்ஜியா வேர்ஹாம், ஆஷா ஷோபனா ஆகியோர் தலா 2 விக்கெட்டை எடுத்தனர்.

பரபரப்பாக சென்ற போட்டியில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என கலக்கிய ஆர்சிபி 3வது வெற்றியை பதிவு செய்ததது.

இந்த போட்டிக்கு முன்னர் இரண்டு தொடர் தோல்விகளை அடைந்ததது ஆர்சிபி மகளிர். இதைத்தொடர்ந்து தற்போது அசத்தலான வெற்றி மூலம் கம்பேக் செய்துள்ளது. 

நாளை நடைபெற இருக்கும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மகளிர் - மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிகள மோத இருக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி