தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Wpl 2024: கம்பேக்குனா இப்படித்தான் இருக்கனும்! ஆர்சிபி மகளிருக்கு எதிராக ஆல்ரவுண்ட் ஆட்டத்தில் கலக்கிய மும்பை இந்தியன்ஸ்

WPL 2024: கம்பேக்குனா இப்படித்தான் இருக்கனும்! ஆர்சிபி மகளிருக்கு எதிராக ஆல்ரவுண்ட் ஆட்டத்தில் கலக்கிய மும்பை இந்தியன்ஸ்

Mar 02, 2024, 11:45 PM IST

google News
தோல்விக்கு பின்னர் களமிறங்கிய மும்பை பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியுடன் கம்பேக் கொடுத்துள்ளது. (PTI)
தோல்விக்கு பின்னர் களமிறங்கிய மும்பை பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியுடன் கம்பேக் கொடுத்துள்ளது.

தோல்விக்கு பின்னர் களமிறங்கிய மும்பை பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியுடன் கம்பேக் கொடுத்துள்ளது.

மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் 9வது ஆட்டம் ஆர்சிபி மகளிர் - மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிகளுக்கு இடையே பெங்களுருவில் நடைபெற்றது. இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்றிருந்த நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை பெறப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்ட்டிருந்தது.

இதையடுத்து டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

ஆர்சிபி திணறல் பேட்டிங்

மும்பை அணியின் தரமான பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் திணறிய ஆர்சிபி பேட்டர்கள் பவர்ப்ளே முடிவதற்குள்ளாகவே டாப் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினார். ஓபனிங் பேட்டரும், கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா 9, சோபி டெவின் 9, சப்பினேனி மேகனா 11 ரன்கள் அடித்து அடுத்தடுத்து அவுட்டானார்கள்.

இதைத்தொடர்ந்து விக்கெட் சரிவை தடுத்து பொறுப்புடன் பேட் செய்த எலிசா பெர்ரி 44 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இவருக்கு அடுத்தபடியாக ஜார்ஜியா வேர்ஹாம் 27 ரன்கள் எடுத்தார்.

20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் என குறைவான ஸ்கோர் தான் ஆர்சிபி மகளிர் எடுத்தது.

மும்பை பவுலர்களில் பூஜா வஸ்த்ராகர் 3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

மும்பை கம்பேக்

கடந்த போட்டியில் தோல்வியை தழுவியதால் புள்ளிப்பட்டியில் இருந்து கீழே இறங்கிய மும்பை, இந்த போட்டியில் கம்பேக் ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

எளிய ஸ்கோரை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் மகளிர் 15.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

மும்பை பேட்டர்களில் அதிகபட்சமா அமெலியா கெர் 24 பந்துகளில் 40 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். ஓபனர் ய்ஸ்திகா பாட்யா 31, கேப்டன் நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் 27, ஹேய்லீ மேத்யூஸ் 26 ரன்கள் எடுத்தனர்.

இந்த வெற்றியால் மும்பை இந்தியன்ஸ் மகளிர் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி