WPL 2024: Unstoppable மும்பை இந்தியன்ஸ்! பவுலிங், பேட்டிங்கில் குஜராத் ஜெயிண்ட்ஸ்க்கு எதிராக முழு ஆதிக்கத்துடன் வெற்றி
Feb 25, 2024, 11:01 PM IST
பவுலிங், பேட்டிங் என இரண்டிலும் குஜராத் அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்திய மும்பை இந்தியன்ஸ் இந்த சீசனின் இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது.
மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் மூன்றாவது போட்டி குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் - மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிகளுக்கும் இடையே பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தது.
குஜராத் பேட்டிங் சொதப்பல்
இதையடுத்து முதலில் பேட் செய்த குஜராத் ஜெயிண்ட் மகளிர் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. முக்கிய பேட்டர்கள் எல்லோரும் சொதப்பிய நிலையில் டெயிலண்டரான தனுஜ கன்வார் அதிகபட்சமாக 28 ரன்கள் அடித்தார்.
இவருக்கு அடுத்தபடியாக கேத்ரின் பிரைஸ் 25 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அணியின் கேப்டனும் ஓபனிங் பேட்டருமான பீத் மூனி 24 ரன்கள் எடுத்தார்.
மும்பை பவுலர்கள் மிகவும் சிக்கனமாக பந்து வீசிய அமிலியா கெர் 17 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல் வேகப்பந்து ஷப்னிம் இஸ்மாயில் சிறப்பாக பந்து வீசி 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
மும்பை வெற்றி
இதைத்தொடர்ந்து இந்த எளிய இலக்கை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் 18.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஓபனிங் பேட்டர்கள் யஸ்திகா பாட்யா 7, ஹேலி மேத்யூஸ் 7 ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினார்.
ஆனால் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் பொறுப்புடன் பேட் செய்து கடைசி வரை அவுட்டாகாமல் 46 ரன்கள் எடுத்தார். பவுலிங்கில் கலக்கிய அமிலியா கெர் பேட்டிங்கிலும் 31 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை அளித்தார். மற்றொரு டாப் ஆர்டர் பேட்டர் நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் 22 ரன்கள் எடுத்தார்.
குஜராத் அணியிலும் பேட்டிங்கள் டாப் ஸ்கோரராக இருந்த தனுஜா கன்வார் 2 விக்கெட்டுகளை எடுத்தார். விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கும் மும்பை அணி, தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்றுள்ளது.
நாளை நடைபெறும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ்மகளிர் - யுபி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9