World Cup 2023: பவுலிங், பேட்டிங்கில் மிரட்டல் ஆட்டம்! நெதர்லாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் ஹாட்ரிக் வெற்றி
Nov 03, 2023, 08:27 PM IST
World Cup 2023, NED vs AFG Result: பவுலிங், பேட்டிங் என கலக்கிய ஆப்கானிஸ்தான் அணி நெதர்லாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றிகரமாக சேஸ் செய்து அரையிறுதிக்கான வாய்ப்பையும் தக்க வைத்துள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 34வது போட்டி நெதர்லாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே லக்னோவிலுள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 46.3 ஓவரில் 179 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியுள்ளது. அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சைப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட் 58, மேக்ஸ் ஓ டவுட் 42, கொலின் அக்கர்மேன் 29 ரன்கள் அடித்தனர். நெதர்லாந்து அணியில் 6 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகியுள்ளனர். அத்துடன் நான்கு பேட்ஸ்மேன்கள் ரன் அவுட் ஆகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் பவுலர்களில் முகமது நபி 3, நூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முஜீப் உர் ரஹ்மான் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்தி கொள்ள 180 ரன்களை சேஸ் செய்ய வேண்டிய நிலையில் களமிறங்கியது. இதைத்தொடர்ந்து 31.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து 111 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணியில் ஹஸ்மதுல்லா ஷாகிதி 56 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த அஸ்மதுல்லா உமர்சாய் 31 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். ரஹ்மத் ஷா அரைசதமடித்து 52 ரன்கள் எடுத்தார்.
நெதர்லாந்து பவுலர்களில் லோகன் வேன் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே,சாகிப் சுல்பிகர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் நான்கு வெற்றிகளை பெற்றிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியதுடன், அரையிறுதி வாய்ப்பையும் தக்க வைத்துள்ளது.
28 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது நபி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்