தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  World Cup 2023: வெற்றியுடன் அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்த பாகிஸ்தான்! வெளியேறிய வங்கதேசம்

World Cup 2023: வெற்றியுடன் அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்த பாகிஸ்தான்! வெளியேறிய வங்கதேசம்

Oct 31, 2023, 09:37 PM IST

google News
வங்கதேச அணியை 105 பந்துகள் மீதமிருக்க வீழ்த்திய பாகிஸ்தான் அணி, பேட்டிங், பவுலிங் பீல்டிங் என ஆல்ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கான வாய்ப்பையும் உறுதிப்படுத்தியுள்ளது.
வங்கதேச அணியை 105 பந்துகள் மீதமிருக்க வீழ்த்திய பாகிஸ்தான் அணி, பேட்டிங், பவுலிங் பீல்டிங் என ஆல்ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கான வாய்ப்பையும் உறுதிப்படுத்தியுள்ளது.

வங்கதேச அணியை 105 பந்துகள் மீதமிருக்க வீழ்த்திய பாகிஸ்தான் அணி, பேட்டிங், பவுலிங் பீல்டிங் என ஆல்ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கான வாய்ப்பையும் உறுதிப்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பை தொடரின் 31வது போட்டி வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹாசன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி 45.1 ஓவரில் 204 ஆல்அவுட்டாகியுள்ளது. வங்கதேசம் அணியில் மஹ்மதுல்லா அரைசதமடித்து 56 ரன்கள் எடுத்தார்.

இவருக்கு அடுத்தபடியாக ஓபனிங் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் 45, கேப்டன் ஷாகிப் அல் ஹாசன் 43 ரன்கள் அடித்துள்ளனர். பாகிஸ்தான் பவுலர்களில் ஷாகின் அப்ரிடி, முகமது வாசிம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஹரிஸ் ராஃப் 2 விக்கெட்டுகளையும், உஸ்மான் மிர், இப்திகார் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பாகிஸ்தான் தனது அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ளும் விதமாக முக்கிய போட்டியாக இது அமைந்திருந்த நிலையில், 32.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஓபனிங் பேட்ஸ்மேன் ஃபகர் ஸமான் 81, அப்துல்லா ஷபிக் 68 ரன்கள் எடுத்தனர். வங்கதேச பவுலர்களில் மெஹ்தி ஹாசன் மிராஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பாகிஸ்தான் அணியில் அதிரடியாக பேட் செய்த ஓபனிங் பேட்ஸ்மேன் 74 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து, 7 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளை பறக்க விட்ட ஃபகர் ஸமான் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

அப்துல்லா ஷபிக் - ஃபகர் ஸமான் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்தனர். இதைத்தொடர்ந்து பாபர் அசாம் 9 ரன்னில் அவுட்டாகி வெளியேறியபோதிலும், முகமது ரிஸ்வான் 26, இப்திகார் அகமது 17 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தாந் அணி புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. அத்துடன் உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி நான்காவது முறையாக 100 பந்துகளுக்கு அதிகமாக மீதமிருக்கும் நிலையில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தோல்வியின் மூலம் வங்கதேச அணிக்கான அரையிறுதிக்கான வாய்ப்புகளை அனைத்தையும் இழந்துள்ளது. புள்ளிப்பட்டியலில் தற்போது இங்கிலாந்து அணி தொடர்ந்து கடைசி இடத்தில் இருந்து வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி