தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  World Cup 2023: பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்த தவறிய நெதர்லாந்து! வங்கதேசம் அணிக்கு 230 ரன்கள் இலக்கு

World Cup 2023: பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்த தவறிய நெதர்லாந்து! வங்கதேசம் அணிக்கு 230 ரன்கள் இலக்கு

Oct 28, 2023, 06:00 PM IST

google News
பேட்டிங்குக்கு நன்கு சாதகமாக இருந்த ஆடுகளத்தில் வங்கதேச பவுலர்களுக்கு எதிராக நெதர்லாந்து பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தவில்லை. வங்கதேசம் அணி 230 ரன்களை சேஸ் செய்தால் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறலாம்.

உலகக் கோப்பை 2023 தொடரின் 28வது போட்டி வங்கதேசம் - நெதர்லாந்து அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. உலகக் கோப்பை 2023 தொடரில் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியாக இது அமைந்துள்ளது.

இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த 50 ஓவரில் 229 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியுள்ளது.

நெதர்லாந்து அணி கேப்டன் அதிகபட்சமாக ஸ்காட் எட்வர்ட்ஸ் 68 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்தபடியாக இன்றைய போட்டியில் சேர்க்கப்பட்ட வெஸ்லி பாரேசி 41, சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 35 ரன்கள் எடுத்தனர்.

கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய லோகன் வான் பீக் 16 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கதேச பவுலர்களில் ஷோரிபுல் இஸ்லாம், தஸ்கின் அஹமது, முஸ்தபிசுர் ரஹ்மான், மெகிதி ஹாசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். கேப்டன் ஷாகிப் அல் ஹாசன் ஒரு விக்கெட்டை எடுத்தார்.

நெதர்லாந்துக்கு அணிக்கு எதிராக வங்கதேசம் அணி 230 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில், எட்டாவது ஹோட்டலில் இருந்து விர்ரென ஐந்தாவது இடத்துக்கு முன்னேறிவிடும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி