IND vs SL Preview: 12 ஆண்டுகளுக்கு பிறகு அதே இடம்! பழிதீர்க்க காத்திருக்கும் இலங்கை? Repeat செய்யும் முனைப்பில் இந்தியா
Nov 02, 2023, 06:10 AM IST
World Cup 2023, IND vs SL Preview: இலங்கையை வீழ்த்தி உலக சாம்பியன் ஆன இந்தியா 12 ஆண்டுகளுக்கு பிறகு அதே அணியை, அதே மைதானத்தில் வைத்து உலகக் கோப்பை தொடரில் மீண்டும் சந்திக்கிறது. இந்தப் போட்டியில் 2011 சம்பவம் ரிப்பீட்டு ஆகுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 33வது போட்டி இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே மும்பையில் இன்று நடைபெறுகிறது. பகலிரவு ஆட்டமாக வான்கடே மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.
உலகக் கோப்பை 2023 தொடரில் இதுவரை ஒரு தோல்வியை கூட சந்திக்காத இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. முதல் 5 போட்டியில் சேஸிங்கில் ஜெயித்த இந்தியா, கடைசி போட்டியில் முதலில் பேட் செய்து வெற்றி பெற்றது. அனைத்து வித சவால்களையும் எதிர்கொண்டு பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்படும் அணியாக இருந்து வருகிறது.
டாப் ஆர்டர் பேட்டிங்கில் ரோஹித், கோலி, மிடில் ஆர்டரில் கேஎல் ராகுல் நல்ல பார்மில் இருந்து வருகின்றனர். சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் ஒரேயொரு முறை அரைசதம் அடித்தபோதிலும், திருப்புமுனையை தரும் விதமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எனவே இவர்கள் இருவரும் மிகப் பெரிய இன்னிங்ஸை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இந்தப் போட்டி அமைந்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் சேர்த்து 134 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். எனவே அவர் பெரிய இன்னிங்ஸை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இந்திய பவுலர்களின் செயல்பாடு இதுவரை திருப்தி அளிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. அனைத்து பவுலர்களும் விக்கெட்டுகள் வீழ்த்துபவர்களாக இருப்பதுடன், தக்க நேரத்தில் எதிரணியனரை ரன் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தவும் செய்கிறார்கள். முகமது ஷமியின் வருகை இந்திய பவுலிங் படைக்கு கூடுதல் பூஸ்டாக அமைந்துள்ளது.
இலங்கை அணி விளையாடி 6 போட்டிகளில் 2 வெற்றி, 4 தோல்விகளை பெற்றுள்ளது. முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவிய இலங்கை, பின்னர் நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்றது, தனது கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. இதன்மூலம் அந்த அணிக்கு எதிராக தோல்வியை தழுவிய இரண்டாவது அணியாக மாறியது.
அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் வருகை இலங்கை அணி பேட்டிங், பவுலிங் ஆகிவற்றுக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக பேட்டிங், பவுலிங் என சிறப்பாக விளையாடக்கூடிய வீரராக இருந்து வந்துள்ளார் ஏஞ்சலோ மேத்யூஸ். எனவே அவர் இந்தியாவுக்கு பேட்டிங்கிலோ அல்லது பவுலிங்கிலோ நெருக்கடி தரலாம். இதுவரை சதீர சமரவிக்ரமா, நிஸ்ஸாங்க, குசால் மெண்டில் பேட்டிங்கிலும், மதுஷங்கா, ரஜிதா ஆகியோர் பவுலிங்கில் ஜொலித்து வருகின்றனர். இடது கை வேகப்பந்து வீச்சாளரான மதுஷங்கா வலது கை பேட்ஸ்மேன்களுக்கு தலைவலியை தரும் பவுலராக இருந்து வருகிறார்.
அந்த வகையில் இடது கை பவுலர்களை எதிர்கொள்ள திணறும் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, மதுஷங்கா ஆகியோரில் யார் சாதிப்பார் என்பது எதிர்பார்ப்பாகவே உள்ளது. அத்துடந் மேத்யூஸ் ரோஹித் ஷர்மாவை 7 முறை அவுட்டாக்கியுள்ளார். இதில் 3 முறை டக் அவுட்டாகும். அதேபோல் ஆல்ரவுண்டர் தனஞ்ஜெய டி சில்வா இதுவரை பவுலிங்கில் பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செய்லபடும் அவரது ஆட்டமும் கவனிக்க வைக்கும். கடந்த மாதம் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் பவுலிங்கில் கலக்கிய வெல்லலகே இந்திய பேட்டிங் வரிசையை கட்டுப்படுத்த அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.
பிட்ச் நிலவரம்
ரன் வேட்டை நடத்துக்கூடிய ஆடுகளமாக இருந்து வரும் வான்கடே மைதானத்தில் தென் ஆப்பரிக்கா அணி விளையாடி இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட் செய்து 350+ ஸ்கோரை பதிவு செய்தது. இதேபோன்றதொரு அதிக ஸ்கோர் அடிக்கும் ஆடுகளமாக இன்றைய போட்டியும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வறண்ட வானிலை 35 டிகிரி செல்சியஸ் அளவில் வெயில் வாட்டி வதைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பின்னர் இந்தியா - இலங்கை அணி அதே மைதானத்தில் மோதுகிறது. எனவே இலங்கை பழி தீர்க்குமா அல்லது இந்தியா 12 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவத்தை ரிப்பீட்டு செய்யுமா என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
உலகக் கோப்பை தொடரில் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 4 முறை இலங்கை. 4 முறை இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் போயுள்ளது. 1996 உலகக் கோப்பை காலிறுதி, 2007 உலகக் கோப்பை லீக் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவை தொடரை வெளியேற்றிய அணியாக இலங்கை உள்ளது.
அதேசமயம் 2011 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி தான் இந்தியா சாம்பியன் ஆனது. எனவே இவ்விரு அணிகளும் மோதிய உலகக் கோப்பை போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளன. அந்த வகையி இன்று நடைபெறும் போட்டியும் இந்தியாவின் வெற்றிப்பயணத்துக்கு இலங்கை வேகத்தடை போடுமாயின் முக்கியமான போட்டியாக மாறும்.
ஆனால் இலங்கை தோல்வியை தழுவினால் தொடரை விட்டு வெளியேறும் சிக்கலுக்கு ஆளாக நேரிடும். எனவே இந்தியா வெற்றி பயணத்தை தொடரவும், இலங்கை தோல்வியை தடுக்கும் விதமகாவும் விளையாட வேண்டிய சூழலில் களமிறங்குகின்றன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்