தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  World Cup 2023: 2011 உலகக் கோப்பை பைனலிஸ்ட் மீண்டும் அதே இடத்தில் மோதல்! டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு

World Cup 2023: 2011 உலகக் கோப்பை பைனலிஸ்ட் மீண்டும் அதே இடத்தில் மோதல்! டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு

Nov 02, 2023, 02:23 PM IST

google News
World Cup 2023, IND vs SL Toss: 2011 உலகக் கோப்பை பைனலிஸ்ட்கள் மோதும் இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி காம்பினேஷனுடன் களமிறங்கும் நிவையில், இலங்கை அணியில் ஒரு மாற்றமாக லெக் ஸ்பின்னர் துஷன் ஹேமந்தா சேர்க்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பை தொடரின் 33வது போட்டி இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

இலங்கை அணியில் ஆல்ரவுண்டர் தனஞ்ஜெய டி சில்வாவுக்கு பதிலாக லெக் ஸ்பின்னர் துஷன் ஹேமந்தா சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் அதே காம்பினேஷனுடன் களமிறங்குகிறது.

போட்டி நடைபெறும் வான்கடே மைதானத்தில் இரண்டு சைடு பவுண்டரிகளும் முறையே 64, 69 மீட்டர் நீளம் கொண்டதாகவும், ஸ்டெரியிட் பவுண்டரி 76 மீட்டர் கொண்டதாகவும் உள்ளது

உலகக் கோப்பை தொடரில் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 4 முறை இலங்கை. 4 முறை இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் போயுள்ளது. 1996 உலகக் கோப்பை காலிறுதி, 2007 உலகக் கோப்பை லீக் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவை தொடரை வெளியேற்றிய அணியாக இலங்கை உள்ளது.

2011 பைனலிஸ்ட்களான இந்தியா - இலங்கை மீண்டும் அதே மைதானத்தில் 12 ஆண்டுகள் கழித்து உலகக் கோப்பை போட்டிகளில் மோதுகின்றன. அந்த வகையில் இலங்கை பழி தீர்க்குமா அல்லது இந்தியா 12 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவத்தை ரிப்பீட்டு செய்யுமா என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் விவரம்:

இந்தியா: ரேஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ்

இலங்கை: பாதும் நிஸ்ஸஹ்கா, திமுத் கருமரத்னே, குசால் மெண்டிஸ் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா, துஷந்த் ஹேமந்தா, ஏஞ்சலோ மேத்யூஸ், துஷ்மந்தா சமீரா, மகேஷ் தீக்‌ஷனா, கசுன் ரஜிதா, தில்ஷான் மதுஷங்கா.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி