தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  World Cup 2023: இருவர் சதம்! தென் ஆப்பரிக்கா நான்காவது முறையாக 350+ ஸ்கோர் - நியூசிலாந்துக்கு மற்றொரு சவால் இலக்கு

World cup 2023: இருவர் சதம்! தென் ஆப்பரிக்கா நான்காவது முறையாக 350+ ஸ்கோர் - நியூசிலாந்துக்கு மற்றொரு சவால் இலக்கு

Nov 01, 2023, 08:49 PM IST

google News
குவன்டைன் டி காக், ராஸ்ஸி வான் டெர் டுசென் ஆகியோர் சதமடிக்க இருவரும் இணைந்து 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பார்ம் இல்லாமல் தவித்து வந்த டேவிட் மில்லர் கடைசி நேரத்தில் அதிரடி காட்டி அரைசதமடித்தார். தென்ஆப்பரிக்கா அணி நான்காவது முறையாக இந்த உலகக் கோப்பை தொடரில் 350+ ஸ்கோர் எடுத்துள்ளது. (ANI)
குவன்டைன் டி காக், ராஸ்ஸி வான் டெர் டுசென் ஆகியோர் சதமடிக்க இருவரும் இணைந்து 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பார்ம் இல்லாமல் தவித்து வந்த டேவிட் மில்லர் கடைசி நேரத்தில் அதிரடி காட்டி அரைசதமடித்தார். தென்ஆப்பரிக்கா அணி நான்காவது முறையாக இந்த உலகக் கோப்பை தொடரில் 350+ ஸ்கோர் எடுத்துள்ளது.

குவன்டைன் டி காக், ராஸ்ஸி வான் டெர் டுசென் ஆகியோர் சதமடிக்க இருவரும் இணைந்து 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பார்ம் இல்லாமல் தவித்து வந்த டேவிட் மில்லர் கடைசி நேரத்தில் அதிரடி காட்டி அரைசதமடித்தார். தென்ஆப்பரிக்கா அணி நான்காவது முறையாக இந்த உலகக் கோப்பை தொடரில் 350+ ஸ்கோர் எடுத்துள்ளது.

உலகக் கோப்பை தொடரின் 32வது போட்டி தென் ஆப்பரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே புனேவிலுள்ள மகாராஷ்ட்ரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாப் லாதம் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் குதிகாலில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக கைவிரல் காயத்திலிருந்து முழுவதுமாக குணமடைந்து முழு பிட்னஸ் பெற்றிருக்கும் டிம் செளதி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பை 2023 தொடரில் முதல் போட்டியில் செளதி இன்று களமிறங்கியுள்ளார்.

முதலில் பேட் செய்த தென்ஆப்பரிக்கா 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பரிக்கா பேட்ஸ்மேன்களில் ராஸ்ஸி வான் டெர் டுசென் 133 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக குவன்டைன் டி காக் 114 ரன்கள் அடித்துள்ளார். இவர் இந்த உலகக் கோப்பை தொடரில் நான்காவகு சதத்தை பதிவு செய்தார்.

கடைசி நேரத்தில் அதிரடியாக பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்ட டேவிட் மில்லர் 30 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

நியூசிலாந்து பவுலர்களில் டிம் செளதி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போல்ட், ஜேமி நீஷம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

நியூசிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற சாதனை இலக்கை சேஸ் செய்ய வேண்டியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி