தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  World Cup 2023: மரண பயத்தை காட்டிய நியூசிலாந்து! 5 ரன்களில் த்ரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா

World Cup 2023: மரண பயத்தை காட்டிய நியூசிலாந்து! 5 ரன்களில் த்ரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா

Oct 29, 2023, 08:17 AM IST

google News
கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை 4 பீல்டர்கள் தான் பவுண்டரி அருகே நிற்க வேண்டும் என்ற நிர்பந்தத்தம் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டது. இதை சிறப்பாக ஹேண்டில் செய்து கடைசி பந்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை தொடரின் 27வது போட்டி ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தரம்சாலாவில் நடைபெற்றது, உலகக் கோப்பை 2023 தொடரில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போட்டிகளில் ஒன்றாக இது அமைந்திருக்கும் இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 388 ரன்கள் குவித்தது. ஆஸ்திரிலேயா அணியில் அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 109, டேவிட் வார்னர் 81, மேக்ஸ் வெல் 41 ரன்கள் எடுத்தனர்.

கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் 14 பந்துகளில் 37 ரன்கள் அடித்து அற்புதமான கேமியோ இன்னிங்சை வெளிப்படுத்தினார்.

நியூசிலாந்து பவுலர்களில் ட்ரெண்ட் போல்ட், கிளென் பிளிப்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அந்த அணியின் ஸ்டிரைக் பவுலராக இருந்து வந்த சாண்ட்னர் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும் 80 ரன்களை வாரி வழங்கியுள்ளார். மேட் ஹென்றி, ஜேமி நீஷம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து 389 ரன்கள் என்ற மிகப் பெரிய சேஸ் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 383 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணி 14 ரன்கள் எடுத்த நிலையில் 5 ரன்களில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணியில் பார்மில் இருக்கும் இளம் பேட்ஸ்மேனான ரச்சின் ரவீந்திரா சதமடித்து 89 பந்துகளில் 116 ரன்கள் எடுத்தார். டேரில் மிட்செல் 54 ரன்கள் எடுத்தார்.

கடைசி ஓவர் வரை அதிரடியாக பேட் செய்து ரன் குவித்த ஜேமி நீஷம் 39 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி