IND vs AUS T20: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 வெற்றி பயணத்தை தொடருமா இந்தியா? இன்று இரண்டாவது போட்டி
Nov 26, 2023, 06:10 AM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற இருக்கும் போட்டி மழையால் பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி திருவனந்தபுரம் க்ரீந் பீல்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 209 ரன்கள் என சாதனை சேஸ் செய்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இது இந்தியாவின் அதிகபட்ச சேஸிங்காகவும் அமைந்தது. போட்டி நடைபெறும் திருவனந்தபுரம் மைதானத்தில் கடைசியாக இந்திய அணி, இலங்கைக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் கடந்த ஜனவரி மாதம் கடைசியாக விளையாடியது. இதில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை பதிவு செய்தது.
இங்கு கடைசியாக நடைபெற்ற டி20 போட்டியில் இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகள் கடந்த 2022 மோதின. லோ ஸ்கார் ஆட்டமாக அமைந்த இந்த போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் இந்தியா ஆல்ரவுண்டர் இல்லாமல் பேட்டிங்கில் தடுமாறியது. எனவே அந்த குறையை போக்கும் விதமாக ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரில் ஒருவர் அணியில் சேர்க்கப்படலாம். பேட்டிங்கில் ஒரு பந்து கூட எதிர்கொள்ளாமல் டைமண்ட் டக்அவுட்டான ருதுராஜ் ஆட்டம் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை சரியான சமநிலையுடன் கொண்ட அணியாக உள்ளது. இருப்பினும் பவுலிங் ஆப்ஷனாக கேன் ரிச்சர்ட்சன், ஆரான் ஹார்டி ஆகியோர் உள்ளனர்.
பிட்ச் நிலவரம்
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 3 டி20 போட்டிகளும் லோ ஸ்கோர் போட்டியாக அமைந்துள்ளது. மிகவும் மெதுவாக செயல்படும் பிட்சாகவும், பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கும் விதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே டாஸ் வெல்லும் அணி சேஸிங்கை தேர்வு செய்யலாம்.
திருவனந்தபுரத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையில்,போட்டி நடைபெறும் நாளான இன்றும் மழையால் ஆட்டம் பாதிக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 செப்டம்பரில் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் ஆஸ்திரேலியா அணி கடைசியாக இந்தியாவை வீழ்த்தியது. இதன் பின்னர் தற்போது நடைபெற்று வரும் தொடரில் இந்தியா தனது வெற்றி பயணத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்