தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Alyssa Healy: ‘இங்கு ஜெயிப்பது எளிதல்ல’-ஆஸி., கேப்டன் அலிசா பேட்டி

Alyssa Healy: ‘இங்கு ஜெயிப்பது எளிதல்ல’-ஆஸி., கேப்டன் அலிசா பேட்டி

Manigandan K T HT Tamil

Dec 24, 2023, 04:31 PM IST

google News
INDW vs AUSW Only Test: "இங்கு வெற்றி பெறுவது எளிதல்ல, அதை நாங்கள் கண்டு உணர்ந்தோம்." (PTI)
INDW vs AUSW Only Test: "இங்கு வெற்றி பெறுவது எளிதல்ல, அதை நாங்கள் கண்டு உணர்ந்தோம்."

INDW vs AUSW Only Test: "இங்கு வெற்றி பெறுவது எளிதல்ல, அதை நாங்கள் கண்டு உணர்ந்தோம்."

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்றைய தினம் ஒரு மோசமான நாள் மட்டுமே என்று ஆஸ்திரேலியாவின் மகளிர் அணி கேப்டன் அலிசா ஹீலி தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பெண்கள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக ஆஸி., மகளிர் அணியை இந்திய மகளிர் அணி வென்றுள்ளது வரலாற்றுச் சாதனையாக பார்க்கப்படுகிறது, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், தனது அணியைச் சேர்ந்த அனைவரும் இந்த மகத்தான வெற்றிக்கு பங்களித்ததாக கூறினார்.

அதைத் தொடர்ந்து ஆஸி., மகளிர் அணி கேப்டன் அலிசா ஹீலி கூறுகையில், "மும்பையில் டெஸ்டில் ஜெயிப்பது அவ்வளவு எளிதல்ல. இன்றைய நாளைத் தவிர மற்ற நாட்கள் நாங்கள் சிறப்பாகவே பங்களிப்பை செய்தோம். இனிவரும் நாட்களில் வான்கடே ஸ்டேடியத்தில் விளையாடுவதில் ஆர்மாக இருக்கிறேன்.

இங்கு வந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியது எவ்வளவு அற்புதமான அனுபவம். இங்கு வெற்றி பெறுவது எளிதல்ல, அதை நாங்கள் கண்டு உணர்ந்தோம். எங்களுக்கு ஒரு மோசமான நாளாக இன்றைய நாள் இருக்கலாம். மற்ற நாட்களில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டோம். எங்கள் வீராங்கனைகளின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

இந்திய அணிக்கு நியாயமான ஆட்டம், அவர்கள் ஒரு அற்புதமான வேலையைச் செய்தார்கள், குறிப்பாக பேட்டிங்கில் எங்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். இறுதியில் அதிக ரன்களை எங்கள் மீது திணித்தனர்.

இங்கே வான்கடேயில் உள்ள சூழ்நிலைகளில் இருந்து நாங்கள் கொஞ்சம் நம்பிக்கை கொள்ள முடியும். நாங்கள் இங்கு அதிகம் கிரிக்கெட் விளையாடியதில்லை. இன்னும், இந்தத் தொடரில் இன்னும் 6 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன" என்றார் அலிசா ஹீலி.

ஆஸி., மகளிர் அணி ஒரே ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள், 3 டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இந்தியாவுக்கு வந்துள்ளது. முதல் டெஸ்ட் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் கடந்த 21ம் தேதி தொடங்கியது.

ஆஸி., அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 77.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 219 ரன்களில் சுருண்டது. டஹிலா மெஹ்ராத் மட்டும் அரை சதம் விளாசினார். பூஜா, ஸ்நே ராணா ஆகியோர் முறையே 4 மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். தீப்தி 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 126.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 406 ரன்களை குவித்தது.

பின்னர், 187 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸி.,யால் 261 ரன்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை. 75 ரன்கள் எடுத்தால் வெற்றி வெற்றி என்ற எளிய இலக்குடன், கடைசி நாளான இன்று இந்திய மகளிர் அணி, 2வது இன்னிங்ஸில் களமிறங்கியது.

ஷஃபாலி வர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். எனினும், ஸ்மிருதி மந்தனா நிதானமாக விளையாடி 38 ரன்கள் விளாசினார். ரிச்சா கோஷ் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், ஜெமிமா 12 ரன்கள் விளாசினார். இவ்வாறாக 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிக் கனியை பறித்தது. முன்னதாக, 2வது இன்னிங்ஸில் ஸ்நே ராணா 4 விக்கெட்டுகளை அள்ளி ஆட்டநாயகி விருதை வென்றார்.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் ஆட்டம், வரும் வியாழக்கிழமை மும்பையில் வான்கடே ஸ்டேடியத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி