Samit Dravid: 16 அடி பாய்ச்சல்..! தந்தை ராகுல் டிராவிட்டை மிஞ்சிய சமித் டிராவிட் - பவுலிங்கிலும் அசத்தும் விடியோ
Jan 13, 2024, 04:51 PM IST
கர்நாடக அணிக்காக விளையாடி வரும் ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் கூச் பேகர் கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை அணிக்கு எதிராக 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் வீரர், கேப்டனுமான ராகுல் டிராவிட் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்துள்ளார். இந்திய அணிக்கு பயிற்யாளராக ஆவதற்கு முன்பு இந்தியா யு19 அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டார். அவர் பயிற்சியாளராக இருந்தபோது இந்திய யு19 அணி 2018இல் உலகக் கோப்பையை வென்றது.
2021 முதல் இந்திய சீனியர் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் ராகுல் டிராவிட். இதற்கிடையே இவரது மகன் சமித் டிராவிட் கர்நாடக அணிக்காக விளையாடி வருகிறார்.
18 வயதாகும் சமித் டிராவிட், ஆல்ரவுண்டராக இருந்து வருகிறார். தனது தந்தையை போல் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் சமித் டிராவிட், வேகப்பந்து வீச்சிலும் ஜொலித்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்னர் மும்பைக்கு எதிராக நடைபெற்ற கூச் பேகர் கோப்பை இறுதிப்போட்டியில் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார்.
சமித் டிராவிட் பந்து வீசும் விடியோ எக்ஸ் பக்கத்தில் ஒருவர் பகிர்ந்திருக்கும் நிலையில், அதன் விடியோ தற்போது வைரலாகியுள்ளது.
மும்பைக்கு எதிரான போட்டியில் 19 ஓவர்கள் வீசிய சமித் டிராவிட், 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 380 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியுள்ளது. தற்போது சமித் பேட்டிங் திறமை மீதும் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.
தனது மகன் சமித் டிராவிட் குறித்து ராகுல் டிராவிட் பேட்டி ஒன்றில், "எனது மகன் சமித்துக்கு எந்த பயிற்சியும் அளிப்பத்தில்லை. பெற்றோர், பயிற்சியாளர் என இரு பணிகளை செய்வது கடினமானது. நான் அவருக்கு தந்தையாக இருப்பதில் மகிழ்ச்சி" என்றார்.
அத்துடன், தந்தையாகவும் அவருக்கு இதுவரை என்ன செய்துள்ளேன் என தெரியவில்லை" புன்னகைத்தவாறு கூறினார்.
கூச் பேகார் கோப்பை தொடரில் விளையாடிய 7 போட்டிகளில் 340 ரன்கள், 37.78 சராசரியுடன் அடித்துள்ளார். பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்