Wasim Akram: 'எப்ஸ்டீன் லீக்ஸ்' விவகாரம்: நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த வாசிம் அக்ரம்
Jan 07, 2024, 12:25 PM IST
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம், தன்னையும் இம்ரான் கானையும் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் தீவுடன் இணைத்த வைரல் போஸ்டுக்கு பிறகு எக்ஸ் பயனரை கடுமையாக சாடினார்.
இளம் பெண்கள் மீதான ஜெஃப்ரி எப்ஸ்டீன் பாலியல் துஷ்பிரயோகம் குறித்த புதிய ஆவணங்கள் தலைப்புச் செய்திகளாக வெளிவந்துள்ள நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் சமூக ஊடக பயனர் ஒருவரால் இந்த விவகாரத்தில் இணைந்து பேசப்பட்டார். அந்த நெட்டிசன் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் குறித்து பரபரப்பான கருத்தை முன்வைத்தார். சமீபத்திய அறிக்கைகளின்படி, எப்ஸ்டீன் சம்பந்தப்பட்ட வழக்கைத் தொடர்ந்து 130 க்கும் மேற்பட்ட கூடுதல் கோப்புகள் பகிரங்கப்படுத்தப்பட்டன.
ஆவணங்களில் எப்ஸ்டீனுடன் பழகிய அல்லது அவருடன் பணியாற்றிய பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பெயர்கள் இருந்தன. சமீபத்திய வெளியிடப்பட்ட ஆவணங்களின் தொகுப்பு பேசுபொருளாக மாறிய பின்னர், சமூக ஊடக பயனர் எக்ஸ் தளத்தில், முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான் மற்றும் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் வாசிம் ஆகியோரை எப்ஸ்டீனின் தீவுடன் இணைத்து பதிவு வெளியிட்டிருந்தார்.
'ஜெஃப்ரி எப்ஸ்டீன் தீவு' கூற்றுக்கு அக்ரம் கண்டனம்
"இம்ரான் கான் எப்ஸ்டீன் பட்டியலில் உள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான் வாசிம் அக்ரம், இம்ரான் கான் தனிப்பட்ட விமானத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத தீவுக்கு (எப்ஸ்டீன் தீவு) அழைத்துச் செல்லப்பட்ட கதையை அக்ரம் விவரித்திருக்கிறார்" என்று எக்ஸ் பயனர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை கவனித்த வாசிம் அக்ரம், "பொய்களை பரப்புவதை நிறுத்துங்கள்' என்றார்.
இம்ரான் கான் குறித்து அக்ரம் கூறியது என்ன?
2022 நவம்பரில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் சம்பந்தப்பட்ட அதிகம் அறியப்படாத சம்பவத்தை அக்ரம் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "அவரது நண்பருடன் விமான நிலையம் சென்றோம். அவரிடம் ஒரு பிரைவேட் ஜெட் இருந்தது. இது ஒரு தீவுக்கு 45 நிமிட பயணமாக அழைத்துச் சென்றது. தோழியுடன் வாசிம் 'சாட்' செய்ய சென்றுவிட்டார். நாங்கள் ஒரு தீவின் நடுவில் நின்று கொண்டிருந்தோம். எங்களால் ஹோட்டலுக்குத் திரும்பிச் செல்ல முடியவில்லை" என்று அக்ரம் கூறினார்.
பாகிஸ்தான் தனது முதல் உலகக் கோப்பையை வெல்ல உதவியதில் வாசிம் அக்ரம் முக்கிய பங்கு வகித்தார். முன்னாள் கேப்டன் இம்ரான் கான் தலைமையில், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்.சி.ஜி) நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையின் 1992 இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் தோற்கடித்தது. இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய அக்ரம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பாக்., அணிக்காக 50 ஓவர் போட்டிகளில் 502 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அக்ரம்.
டாபிக்ஸ்