தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Virat Kohli: ஸ்லிப் திசையில் பீல்டிங் செய்ய மறுத்த கோலி! வியப்பான பின்னணி காரணத்தை கூறிய பீல்டிங் பயிற்சியாளர் திலீப்

Virat Kohli: ஸ்லிப் திசையில் பீல்டிங் செய்ய மறுத்த கோலி! வியப்பான பின்னணி காரணத்தை கூறிய பீல்டிங் பயிற்சியாளர் திலீப்

Jan 19, 2024, 03:30 PM IST

google News
விராட் கோலி ஸ்லிப் பீல்டிங்கில் நிற்க மறுத்த காரணம் வியப்பாக இருந்தது. கோலி போல் மற்ற இளம் வீரர்களும் பிரதிபலித்தால் இந்தியா அணியே மாறுபட்டு காணப்படும் (ANI )
விராட் கோலி ஸ்லிப் பீல்டிங்கில் நிற்க மறுத்த காரணம் வியப்பாக இருந்தது. கோலி போல் மற்ற இளம் வீரர்களும் பிரதிபலித்தால் இந்தியா அணியே மாறுபட்டு காணப்படும்

விராட் கோலி ஸ்லிப் பீல்டிங்கில் நிற்க மறுத்த காரணம் வியப்பாக இருந்தது. கோலி போல் மற்ற இளம் வீரர்களும் பிரதிபலித்தால் இந்தியா அணியே மாறுபட்டு காணப்படும்

இந்திய அணி பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப்பிடம், ஸ்லிப் பகுதியில் பீல்டிங் நிற்க விருப்பமில்லை என விராட் கோலி கூறினாராம். தனது திறமை மீது நம்பிக்கை இல்லாமல் அவர் அப்படி சொல்லவில்லை எனவும், தன்னை மேலும் பரிசோதிக்கவே அவர் அவ்வாறு சொன்னதாக டி தீலீப் கூறியுள்ளார்.

இதுகுறித்து இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் கூறியதாவது:

விராட் கோலி பீல்டிங்கில் ரன்களை மிச்சப்படுத்துவது, டைவ் அடிப்பது, ஹாட் ஸ்பாட் இடங்களில் நிற்பது என நம் கண்கள் அவரை விட்டு நீங்காத வண்ணம் இருப்பார். உலகக் கோப்பை தொடரின் போது இரண்டு முறை சிறந்த பீல்டிங்குக்கு விருது வாங்கினார்.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின்போது, ஸ்லிப்பில் நிற்பதற்கு விரும்பவில்லை தெரிவித்த அவர் பேட்ஸ்மேன்களுக்கு அருகில் ஷார்ட் அல்லது ஷார்ட் பைன் லெக்கில் நிறக் விரும்புவதாக தெரிவித்தார். இளம் வீரர்களுக்கு சவால் விடுக்கும் விதமாக உலகக் கோப்பை தொடரில் பீல்டிங்கை வெளிப்படுத்தினார்.

அணிக்காக அவர் எப்போதும் பீல்டிங்கில் தீவிரமாக செயல்படுவார். தனது பணியை அவர் சிறப்பாக செய்வதோடு மட்டுமில்லாமல், பலருக்கும் உத்வேகம் அளிக்கும் விதமாக இருந்துள்ளார். அவருடன் இணைந்து பணியாற்றுவதை மிக பெரிய விஷயமாக பார்க்கிறேன். கோலி போல் மற்ற இளம் வீரர்களும் பிரதிபலித்தால் இந்தியா அணியே மாறுபட்டு காணப்படும். அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சிறந்த பீல்டராக ஜொலித்தார்" என்றார்.

கடந்த இரு நாள்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், பேட்டிங்கில் டக் அவுட்டாகி ஏமாற்றிய கோலி, அதற்கு சேர்த்து வைத்தாற் போல் கலக்கலாக பீல்டிங் செய்து பல ரன்களை தடுத்ததுடன், இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை அளித்தார்.

இந்த போட்டி கோல்டன் டக் அவுட்டானார் கோலி. இதன் மூலம் முதல் முறையாக சர்வதேச டி20 போட்டியில் முதல் பந்தில் அவுட்டான கோலி, ஒட்டுமொத்தமாக 35 முறை கோல்டன் டக் அவுட்டாகி இதிலும் சச்சின் டென்டுல்கர் சாதனையை முறியடித்து மோசமான சாதனையை தந் வசமாக்கினார்.

ஆனால் இந்த போட்டியில் விராட் கோலி பீல்டிங் செய்த விதம் அபாரமாக அமைந்தது. அற்புதமான கேட்ச் ஒன்றை பிடித்த கோலி, சிக்ஸ் செல்ல இருந்த பந்தை ஜம்ப் செய்து தடுத்து 4 ரன்களை மிச்சப்படுத்தினார். அத்துடன் முதல் சூப்பர் ஓவரில், லாங் ஆன் திசையில் இருந்து அதிவேக த்ரோ மூலம் குலாப்தின் நயிப்பை ரன் அவுட்டாக்க காரணமாக இருந்தார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தொடர் முழுவதுமே சிறப்பாக பீல்டிங் செய்த கோலி, தொடரின் சிறந்த பீல்டர் விருதையும் வென்றார்.

35 வயதாகும் கோலி, இளம் வீரர் போல் அன்றைய போட்டியில் பீல்டிங்கில் பம்பரமாக சுழன்றார். உலகில் சிறந்த பிட்னஸை கொண்டிருக்கும் விளையாட்டு வீரராக தன்னை அழைக்கப்படுவதற்கு வலு சேர்க்கும் விதமாக கோலியின் பீல்டிங் தொடர்ந்து இருந்து வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி