தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Hbd Virat Kohli: இந்தியாவின் ரன் மெஷினுக்கு பிறந்தநாள்! கோலியின் இந்த தனித்துவ சாதனை பற்றி உங்களுக்கு தெரியுமா?

HBD Virat Kohli: இந்தியாவின் ரன் மெஷினுக்கு பிறந்தநாள்! கோலியின் இந்த தனித்துவ சாதனை பற்றி உங்களுக்கு தெரியுமா?

Nov 05, 2023, 04:45 AM IST

google News
பிறந்தநாளில் உலகக் கோப்பை போட்டி விளையாடுவதென்பது ஸ்பெஷல் தருமணம். அதுவும் சுமார் ஒரு லட்சம் பேரை வரை அமர்ந்து பார்க்ககூடிய உலகின் பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாக இருக்கும் ஈடன் கார்டனில் களமிறங்கி விளையாட இருப்பது விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த தருணமாகவே இருக்கும்.
பிறந்தநாளில் உலகக் கோப்பை போட்டி விளையாடுவதென்பது ஸ்பெஷல் தருமணம். அதுவும் சுமார் ஒரு லட்சம் பேரை வரை அமர்ந்து பார்க்ககூடிய உலகின் பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாக இருக்கும் ஈடன் கார்டனில் களமிறங்கி விளையாட இருப்பது விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த தருணமாகவே இருக்கும்.

பிறந்தநாளில் உலகக் கோப்பை போட்டி விளையாடுவதென்பது ஸ்பெஷல் தருமணம். அதுவும் சுமார் ஒரு லட்சம் பேரை வரை அமர்ந்து பார்க்ககூடிய உலகின் பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாக இருக்கும் ஈடன் கார்டனில் களமிறங்கி விளையாட இருப்பது விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த தருணமாகவே இருக்கும்.

கிரிக்கெட் விளையாட்டில் ஒவ்வொரு தருணங்களிலும் தனியொருவரின் பெயர் ஒட்டு மொத்த ரசிகர்களும் உச்சரிக்கும் விதமாக அமைந்திருக்கும். அந்த வகையில் கபில் தேவ் தொடங்கி சச்சின் டென்டுல்கர், எம்எஸ் தோனி ஆகியோருக்கு அடுத்தபடியாக கோராசாக உலகமே ஒலிக்கும் பெயராக இருப்பது விராட் கோலி.

எதிரி நாடாக கருதப்படும் பாகிஸ்தானில் கூட கோடானு கோடி ரசிகர்களை பெற்றிருக்கும் வீரராக இருந்து வரும் கோலியின் ஆட்டத்துக்கு முன்னாள் ஜாம்பவான வீரர்கள் பலரும் விசிறிகளாகவே உள்ளனர். சச்சினால் நிறுவப்பட்ட ஒவ்வொரு சாதனை மைல்கற்களை அடைந்து புதிய சாதனை படைக்கும் வீரராக இருந்து வரும் கோலி, அடுத்து ஒரு நாள் போட்டிகளில் சச்சினின் 49 சதம் என்ற சாதனையை சமன் செய்ய ஒரு சதம் மட்டுமே தேவைப்பட மிக அருகில் உள்ளார்.

இந்த சூழ்நிலையுடன் தனது 35வது பிறந்தநாளில் உலகக் கோப்பை 2023 தொடரில் தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான போட்டியில் களமிறங்குகிறார் கோலி. கோலி சாதனை நிகழ்த்துவாரோ இல்லையோ, சச்சினுக்கு அடுத்தப்படியாக ரசிகர்களால் தரிசிக்கப்படும் கோலியை காண்பதற்காகவும், அவரது பிறந்தநாள் போட்டியை மறக்கமுடியாத நிகழ்வாக மாற்றுவதற்கும் லேசர் ஷோ, சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோலி உருவ மாஸ்குகள் என களைகட்ட கொல்கத்தா ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள்.

உள்ளூர் கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக விளையாடி வந்த கோலி , தோனி கேப்டன்சியில் ஒரு நாள் போட்டியில் முதன் முதலாக அறிமுகமானார். அதன்பின்னர் தோனி தலைமையிலேயே டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுகமான கோலி, டி20 போட்டிகளில் சுரேஷ் ரெய்னா கேப்டன்சியில் முதல் போட்டியில் விளையாடினார்.

அணியில் அறிமுகமான புதிதிலிருந்து தனது ஆக்ரோஷ ஆட்டத்தால் கவனம் ஈர்த்து வந்த கோலி சாதனைகளின் மன்னாகவும், ரன் மெஷினாகவும் இன்று வரை ஜொலித்து வருகிறார். கோலி நிகழ்த்த பலரும் அறியப்படாத சில சாதனைகளை பார்க்கலாம்.

ஒரு நாள் போட்டியில் கன்சிஸ்டன்ட் மிக்க வீரராக இருந்து வரும் கோலி, அதிவேகமாக 8, 9, 10 மற்றும் 11 ஆயிரம் ரன்களை கடந்த வீரராக இருந்துள்ளார். இந்த சாதனைகளை முறையே 175, 194, 205 மற்றும் 222 ஆகிய இன்னிங்ஸில் செய்துள்ளார். 2018இல் தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான தொடரில் 6 போட்டிகளில் 558 ரன்கள் எடுத்தார் கோலி. இருநாடுகளுக்கு இடையிலான தொடரில் ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ஸ்கோராக இது உள்ளது. கோலியை ஏன் ரன் மெஷின் என ரசிகர்கள் அழைக்கிறார்கள் என்பதற்கான சிறந்த சான்றாக இதை கூறலாம். 

சேஸ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் கோலி தனது 48 சதங்களில் 26 சதங்களை சேஸிங்கின் போது எடுத்துள்ளார். இது ஒரு தனித்துவ சாதனையாகவே உள்ளது. டெஸ்ட், ஒரு நாள், டி20 ஆகிய மூன்று வகை போட்டிகளிலும் 50க்கு மேல் சராசரி வைத்திருக்கும் ஒரே பேட்ஸ்மேன் கோலிதான்

இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக இருந்து வரும் கோலி, 33 வெற்றிகளை பெற்றுள்ளார். அதேபோல் ஒரு நாள் போட்டிகளிலும் 80 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 62 வெற்றிகளை குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 இரட்டை சதங்களை அடித்திருக்கும் கோலி இந்தியாவுக்காக அதிக இரட்டை சதமடித்த வீரராக உள்ளார். கேப்டனாக இருந்தாலும் தனது பேட்டிங்கில் எந்த குறைபாடும் இல்லாமல் விளையாடி வந்த கோலி கேப்டனாக டெஸ்ட் போட்டியில் அதிக ரன் அடித்தவர் (5,142 ரன்கள்), அதிகபட்ச ஸ்கோர் (254 ரன்கள்) அடித்தவர் என்ற சாதனையும் புரிந்துள்ளார்.

2010 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் அனைத்து வகை போட்டிகளையும் சேர்த்து 20 ஆயிரம் ரன்களை கடந்த ஒரே வீரராக கோலி மட்டுமே உள்ளார்.

இதுவரை விராட் கோலி தனது பிறந்தநாளில் இந்தியாவுக்காக இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். 2015இல் தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக மொஹாலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 1 மற்றும் 29 ரன்கள் அடித்தார்.

இதன்பிறகு 2021 உலகக் கோப்பை தொடரில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 2 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். இதைத்தொடர்ந்து முதல் முறையாக தனது பிறந்தநாளில் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ளார். இந்த போட்டி அவருக்கு சாதனை போட்டியாக அமைய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி