தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  T20 World Cup 2024: டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட்: டல்லாஸ் நகரில் முதல் போட்டி

T20 World Cup 2024: டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட்: டல்லாஸ் நகரில் முதல் போட்டி

Marimuthu M HT Tamil

Jan 12, 2024, 11:38 AM IST

google News
டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1ஆம் தேதி அமெரிக்காவும் கனடாவும் சந்திக்கும் போட்டியுடன் தொடங்குகிறது.
டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1ஆம் தேதி அமெரிக்காவும் கனடாவும் சந்திக்கும் போட்டியுடன் தொடங்குகிறது.

டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1ஆம் தேதி அமெரிக்காவும் கனடாவும் சந்திக்கும் போட்டியுடன் தொடங்குகிறது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியானது, வரும் ஜூன் 1ஆம் தேதி, அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான முதல்போட்டியுடன், அமெரிக்காவின் டல்லாஸ் நகரிலுள்ள கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் தொடங்குகிறது. 

அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் முயற்சியில், கரீபியன் நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா உலகக்கோப்பை போட்டியை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

டல்லாஸ், நியூயார்க் மற்றும் புளோரிடாவில் உள்ள ப்ரோவர்ட் கவுண்டி ஆகிய மூன்று நகரங்களில், அமெரிக்கா 16 போட்டிகளை நடத்துகிறது. மீதமுள்ள 45 போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் பகுதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஜூன் 9ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் டி20 போடியில் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

அமெரிக்காவும் கனடாவும் நன்றாக கிரிக்கெட் விளையாடும் நாடுகளாக இல்லை. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) அதிக சலுகைகள் மற்றும் வளங்களை அனுபவிக்கும் 12 முழு உறுப்பினர்களுக்குக் கீழே தரவரிசையில் உள்ளனர்.  ஆனால், அவர்கள் உலகின் பழமையான கிரிக்கெட் போட்டியில் பங்கெடுத்து விளையாடி இருக்கின்றனர். 

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி 1844ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. 

1844 செப்டம்பரில் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டனில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கிரிக்கெட் கிளப்பில் இரு நாடுகளுக்கும் இடையே பதிவு செய்யப்பட்ட முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. 

அப்படி Auty Cup போட்டியின்போது, கனடாவின் முதல் பிரதமர் ஜான் A. மெக்டொனால்ட், 1867-ல் கிரிக்கெட்டை அதிகாரப்பூர்வ விளையாட்டாக அறிவித்தது. 

அதன்பின், டி20 உலகக் கோப்பையில் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு அணிகளும் முதல்முறையாக பங்கேற்கின்றன. இதில் 20 அணிகள் விளையாடுகின்றன. கனடாவுக்கு 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடிய அனுபவம் உள்ளது. 2007 முதல் நான்கு உலகக்கோப்பைப் போட்டிகளில் கனடா பங்கேற்றது. இருப்பினும், அமெரிக்கா, உலகக் கோப்பைகள் இரண்டிற்கும் ஒருபோதும் தகுதி பெறவில்லை. இருப்பினும் அதில் முத்திரை பதிக்க ஆர்வம் காட்டுகிறது. 

ஐசிசி தலைவர் ஜியோஃப் அலார்டிஸ், அமெரிக்காவை கிரிக்கெட்டுக்கான புதிய முன்மாதிரி அணி என்று பாராட்டினார். மேலும் முதல் முறையாக ஒரு பெரிய ஐசிசி நிகழ்வை அமெரிக்கா நடத்துவது உலகின் மிகப்பெரிய விளையாட்டுச் சந்தையில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்று கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி