தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Uganda Cricket: வரலாறு படைத்த உகாண்டா! முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடருக்கு தகுதி - வெளியேறிய ஜிம்பாப்வே

Uganda Cricket: வரலாறு படைத்த உகாண்டா! முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடருக்கு தகுதி - வெளியேறிய ஜிம்பாப்வே

Nov 30, 2023, 04:42 PM IST

google News
2023 உலகக் கோப்பை தொடரை மிஸ் செய்ததை தொடர்ந்து தற்போது 2024ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரிலும் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது ஜிம்பாப்வே அணி. (@CricketUganda)
2023 உலகக் கோப்பை தொடரை மிஸ் செய்ததை தொடர்ந்து தற்போது 2024ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரிலும் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது ஜிம்பாப்வே அணி.

2023 உலகக் கோப்பை தொடரை மிஸ் செய்ததை தொடர்ந்து தற்போது 2024ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரிலும் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது ஜிம்பாப்வே அணி.

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்றில் விளையாடிய 6 போட்டிகளில் 5இல் வெற்றி பெற்றுள்ளது உகாண்டா அணி. இதன் மூலம் 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கு 20வது அணியாக தகுதி பெற்றுள்ளது. அத்துடன் முதல் முறையாக ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடவுள்ளது.

ஐசிசி ஆப்பரிக்கா பகுதிக்கான தகுதி சுற்றில் உகாண்டா அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் இருக்கும் நமிபியா அணியுடன், இரண்டாவது இடத்தில் இருக்கும் உகாண்டா அணி அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

ஆப்பரிக்கா பகுதி தகுதி சுற்று போட்டிகளில் நமிபியா, உகாண்டா, ஜிம்பாப்வே, கென்யா, நைஜிரியா, டான்சானியா, ருவாண்டா ஆகிய அணிகள் பங்கேற்றன.

இதில் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று நமிபியா அணி முதல் இடத்திலும், உகாண்டா அணி 6 போட்டிகளில் 5 வெற்றியுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்த சுற்றில் முக்கிய அணியான ஜிம்பாப்வே 5 போட்டிகளில் 3இல் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது உகாண்டா. இந்த தொடரில் அந்த அணி நமிபியா அணிக்கு எதிராக மட்டும் தோல்வியை தழுவியுள்ளது.

இதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற ருவாண்டா அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணியை 18.5 ஓவரில் 65 ரன்களுக்கு ஆல்அவுட்டாக்கியது உகாண்டா. பின்னர் பேட் செய்து 8.1 ஓவரில் இலக்கை சேஸ் செய்து டி20 உலகக் கோப்பையில் விளையாடும் தகுதியை பெற்று வரலாறு படைத்துள்ளது.

இதற்கிடையே உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டிகளில் ஜிம்பாப்வே அணியின் மோசமான பார்ம் தொடர்ந்து வருகிறது. 2019, 2023 உலகக் கோப்பை தொடரில் தகுதி பெறாமல் இருந்த ஜிம்பாப்வே தற்போது 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை மிஸ் செய்துள்ளது.

இந்த தோல்வியால் 2025இல் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் பங்கேற்கும் வாய்ப்பை ஜிம்பாப்வே அணி இழந்துள்ளது. அடுத்தடுத்து இரண்டு ஐசிசி தொடர்களின் வாய்ப்பு ஜிம்பாப்வே அணியை விட்டு கைமீறி போயுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி