தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Travis Head: ஆஸி., அணிக்கு டிராவிஸ் ஹெட் துணை கேப்டனாக நியமனம்-பாக்.,-க்கு எதிரான பிளேயிங் லெவன் விவரம்

Travis Head: ஆஸி., அணிக்கு டிராவிஸ் ஹெட் துணை கேப்டனாக நியமனம்-பாக்.,-க்கு எதிரான பிளேயிங் லெவன் விவரம்

Manigandan K T HT Tamil

Dec 13, 2023, 02:44 PM IST

google News
அணிகள் கடைசியாக 2022 இல் பாகிஸ்தானில் சந்தித்தபோது ஆஸ்திரேலியா மூன்று டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது. (PTI)
அணிகள் கடைசியாக 2022 இல் பாகிஸ்தானில் சந்தித்தபோது ஆஸ்திரேலியா மூன்று டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது.

அணிகள் கடைசியாக 2022 இல் பாகிஸ்தானில் சந்தித்தபோது ஆஸ்திரேலியா மூன்று டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார்.

நாளை முதல் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் டிராவிஸ் ஹெட் துணை கேப்டனாக ஆஸி., அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்ச் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் லியான், ஜோஷ் ஹேசில்வுட்.

பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், ஷான் மசூத் (கேப்டன்), பாபர் அசாம், சவுத் ஷகீல், சர்பராஸ் அகமது (விக்கெட் கீப்பர்), சல்மான் அலி ஆகா, ஃபஹீம் அஷ்ரப், ஷஹீன் அப்ரிடி, அமீர் ஜமால், குர்ரம் ஷாஜாத்.

இதனிடையே, நாதன் லயன் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை, பெர்த் ஸ்டேடியத்தில் வியாழக்கிழமை தொடங்கும் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் கைப்பற்றி சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

36 வயதான ஆஃப்ஸ்பின்னர் நாதன் லயன், 496 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் களத்தில் உள்ளார், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எடுத்த ஒரே ஆஸ்திரேலியர்களில் ஒருவராக ஷேன் வார்ன் (708) மற்றும் கிளென் மெக்ராத் (563) ஆகியோருடன் அவர் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்த் ஸ்டேடியம் கடந்த காலங்களில் லயனுக்கு விக்கெட்டை வேட்டையாடும் மைதானமாக இருந்தது. அவர் மூன்று டெஸ்ட்களில் 18.45 சராசரியில் 22 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

"ஒரு அணியாக நாங்கள் பொதுவாக ஆஃப்ஸ்பின்னர்களின் பந்துவீச்சை நன்றாக எதிர்கொண்டு விளையாடுகிறோம்," என்று பாகிஸ்தான் அணியின் இயக்குனர் முகமது ஹபீஸ் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “கடந்த இரண்டு தொடர்களில் நாங்கள் நாதன் லயனுக்கு எதிராக அதிக ஸ்ட்ரைக்-ரேட்டைப் பெற்றோம். அது அப்படியே இருக்கும். லயன் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் ஒரு அணியாக நாங்கள் அவரை எதிர்கொள்வோம் என்று நாங்கள் நம்புகிறோம்.

மற்ற எல்லா டெஸ்ட் அணிகளையும் விட லனுக்கு எதிராக பாகிஸ்தான் அதிக ஸ்கோர் விகிதத்தைக் கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தானுக்கு எதிராக லயன் ஒரு விக்கெட்டுக்கு சராசரியாக 41.66 ரன்கள் எடுத்துள்ளார் மற்றும் இலங்கைக்கு எதிராக சொந்த மைதானத்தில் ஒரு விக்கெட்டுக்கு அதிக ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி