World Cup 2023: முதல் போட்டியில் களமிறங்கும் நியூசிலாந்து வேகம் செளதி!அணிக்கு திரும்பிய ரபாடா - தென் ஆப்பரிக்கா பேட்டிங்
Nov 01, 2023, 01:59 PM IST
World Cup 2023, NZ vs SA Toss: கை விரல் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்த பின்னர் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் செளதி இன்று களமிறங்குகிறார். அதேபோல் காயத்தால் கடந்த போட்டியில் விளையாடாத தென் ஆப்பரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடாவும் அணிக்கு திரும்பியுள்ளார்
உலகக் கோப்பை தொடரின் 32வது போட்டி தென் ஆப்பரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே புனேவிலுள்ள மகாராஷ்ட்ரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் குதிகாலில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக கைவிரல் காயத்திலிருந்து முழுவதுமாக குணமடைந்து முழு பிட்னஸ் பெற்றிருக்கும் டிம் செளதி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பை 2023 தொடரில் முதல் போட்டியில் செளதி இன்று களமிறங்குகிறார்.
தென் ஆப்பரிக்கா அணியில் கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாத ரபாடா, நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்குகிறார். கடந்த போட்டியில் தென் ஆப்பரிக்கா வெற்றிக்கு காரணமாக அமைந்த ஸ்பின்னரான தப்ரைஸ் ஷம்சி நீக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பரிக்கா அணி வெற்றி பெற்றிருக்கும் 5 போட்டியில் நான்கு போட்டிகளில் முதலில் பேட் செய்தே வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் இந்த உலகக் கோப்பை தொடரில் ஒரு முறை 400, இரண்டு முறை 350+ ஸ்கோர் அடித்துள்ளது. அந்த வகையில் பேட்டிங்குக்கு சாதகமாக அமைந்திருக்கும் புனே ஆடுகளத்தில் தென் ஆப்பரிக்கா இன்றைய போட்டியிலும் வானவேடிக்கை நிகழ்த்தும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி இந்த உலகக் கோப்பை தொடரில் சேஸ் செய்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், பனிப்பொலிவை கருத்தில் கொண்டு பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
உலகக் கோப்பை போட்டிகளில் தென் ஆப்பரிக்கா - நியூசிலாந்து அணிகள் 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் நியூசிலாந்து 6, தென் ஆப்பரிக்கா 2 முறை வெற்றி பெற்றுள்ளன. கடந்த கால போட்டிகளில் அடிப்படையில் நியூசிலாந்து முன்னணி வகித்தாலும், உச்சகட்ட பார்மில் இருக்கும் தென் ஆப்பரிக்கா பழிதீர்க்க முயற்சிக்கும் என நம்பலாம்.
இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணி வீரர்களின் விவரம்:
தென்ஆப்பரிக்கா: குவன்டைன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி
நியூசிலாந்து: டேவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்), க்ளென் பிளிப்ஸ், ஜேமி நீஷம், மிட்செல் சாண்ட்னர், மேட் ஹென்றி, டிம் செளதி, ட்ரெண்ட் போல்ட்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்