Team India Record: மிகவும் குறுகிய ஒரு நாள் போட்டி! இலங்கையை ஆசிய கோப்பை பைனலில் வீழ்த்தி இந்தியா சாதனை
Sep 18, 2023, 04:43 PM IST
இலங்கை அணிக்கு எதிராக ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பெற்ற வெற்றியின் வரலாற்றில் மிகவும் குறைவான நேரத்தில் நடந்து முடிந்த ஒரு நாள் போட்டி உள்பட பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது.
ஆசிய கோப்பை 2023 தொடர், மழை அச்சுறுத்துலுக்கு இடையே ரன் மழையும், ரெக்கார்ட்டு மழையும் நிகழ்த்தப்பட்டுள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியா அணி ஆசிய கோப்பை தொடரை இரண்டாவது முறையும், ஒட்டுமொத்தமாக 8வது முறையும் வென்றுள்ளது.
அதுவும் இறுதிப்போட்டி யாரும் எதிர்பாராத விதமாக இலங்கை அணியை முழுவதுமாக இந்திய பவுலர்கள் சரணடைய செய்தனர். இதில் முகமது சிராஜ் மட்டும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை வசப்படுத்தினார்.
இதையடுத்து 50 ஓவர்களுக்கு 51 ரன்கள் என்ற இலக்கை, இந்திய ஓபனர்களான சுப்மன் கில் - இஷான் கிஷன் ஜோடி 6.1 ஓவரில் சேஸ் செய்து மிகப் பெரிய வெற்றியை இந்தியாவுக்கு பெற்று தந்தனர்.
இந்தியா - இலங்கை இடையிலான ஆசிய கோப்பை இறுதிப்போட்டி ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறுகிய நேரத்தில் முடிந்த போட்டி என்ற சாதனை புரிந்துள்ளது.
இந்த லிஸ்டில் ஜிம்பாப்வே - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே 13.5 ஓவரில் ஹராரேவில் வைத்து 2017இல் நடைபெற்ற போட்டி முதல் இடத்தில் உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக 15.2 ஓவரில் முடிவுற்றி இந்தியா - இலங்கைக்கு இடையிலான ஆசிய கோப்பை இறுதி போட்டி உள்ளது.
மூன்றாவது இடத்தில் ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையே கொழும்புவில் 2001இல் நடைபெற்ற போட்டி உள்ளது.
இந்தியா - இலங்கை இடையிலான இறுதிப்போட்டியில் வெறும் 129 பந்துகள் மட்டுமே வீசப்பட்டது. இந்திய அணி 92 பந்துகளும், இலங்கை அணி 37 பந்துகளும் வீசியுள்ளன. இதன் மூலம் மிகவும் குறுகிய நேரத்திலும், குறைவான பந்துகளிலும் முடிந்த போட்டி என்ற பெருமை பெற்றுள்ளது.
முன்னதாக, 2000ஆவது ஆண்டில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இந்தியா - இலங்கை இடையிலான போட்டியில், முதலில் பேட் செய்த இலங்கை 299 ரன்கள் எடுத்தது. இதை சேஸ் செய்த இந்திய வெறும் 54 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இந்த சம்பவம் நடந்து 23 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், இந்தியா அணி தற்போது இலங்கையை பழிதீர்த்துக்கொண்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்