Team India: பாண்டியாவுக்கு கல்தா..! வாய்பை பெற்ற இரண்டு இளம் வீரர்கள் - இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
Jul 19, 2024, 02:01 AM IST
இலங்கை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில், டி20 அணி கேப்டன்சியில் பாண்டியாவுக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய ஒரு நாள் அணியில் இரண்டு இளம் வீரர்கள் வாய்ப்பை பெற்றுள்ளனர். சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 27, 28,30 ஆகிய தேதிகளில் பல்லேகலே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதைத்தொடர்ந்து ஒரு நாள் தொடர் ஆகஸ்ட் 2,4,7 ஆகிய தேதிகளில் கொழும்பு மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதையடுத்து இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
பாண்டியாவுக்கு கல்தா
இந்திய டி20 அணியில் சீனியர் வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வை அறிவித்த நிலையில் இளம் வீரர்களுடன் ஜிம்பாப்வே சென்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று நாடு திரும்பியுள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடிய டாப் வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அவர்கள் சிலர் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மிக முக்கியமாக கேப்டன் ரோஹித் ஷர்மா ஓய்வு பெற்றதால் புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்கிற கேள்வி இருந்தது. ரோஹித் இல்லாதபோது கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா அயர்லாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரை வென்று கொடுத்த நிலையில் அவர் நியமிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் திடீர் டுவிட்ஸ்டாக இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், இலங்கைக்கு எதிராக இந்தியா விளையாட இருக்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் பாண்டியாவுக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது.
வாய்ப்பை பெற்ற இளம் வீரர்கள்
அதேபோல் இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான அணியை பொறுத்தவரை ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். ரவீந்திர ஜடேஜா கழட்டிவிடப்பட்டுள்ளார்.
கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளனர். ஷிவம் துபேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அறிமுக வீரர்களாக ரியான் ப்ராக், ஹர்ஷித் ராணா ஆகியோர் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
கம்பீருக்கு முதல் பரிட்சை
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கெளதம் கம்பீருக்கு இலங்கை அணிக்கு எதிரான தொடர் முதல் பரிட்சையாக அமைந்துள்ளது. அத்துடன் டி20, ஒரு நாள் ஆகிய தொடர்களில் சில புதிய வீரர்களுடன் புதிய அணியாக இலங்கையை எதிர்கொள்ள இருக்கிறார்.
இலங்கை தொடருக்கான இந்திய அணியின் முழு விவரம்
இந்தியா டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது. சிராஜ்.
இந்தியா ஒருநாள் அணி: ரோஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்