Australia vs Oman: ஆஸி., வெற்றி கணக்கைத் தொடங்க உதவிய இருவர் கூட்டணி-மேன் ஆஃப் தி மேட்ச் விருதை தட்டிச் சென்ற வீரர்!
Jun 06, 2024, 12:08 PM IST
T20 World Cup 2024: டேவிட் வார்னர் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோரின் 102 ரன்களைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தங்களது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் குரூப் மேட்ச்சில் ஜெயித்தது. ஓமன் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலியாவுடன் ஓமன் அணி மோதியது.
இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு பார்படாஸில் இப்போட்டி தொடங்கி நடந்தது.
டாஸ் வென்ற ஓமன் பவுலிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆஸி., பேட்டிங் செய்தது.
அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது.
டேவிட் வார்னர் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 12 ரன்களிலும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
மேன் ஆஃப் தி மேட்ச்
மேக்ஸ்வெல் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் வந்த மார்கஸ் ஸ்டாய்னிஸ் அதிரடி காட்டி 67 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக நின்றார்.
டிம் டேவிட் 9 ரன்களில் நடையைக் கட்டினார். இவ்வாறாக ஆஸி., 164 ரன்களை எடுத்தது.
165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஓமன் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களில் சரணடைந்தது. அந்த அணியின் அயான் காந் மட்டுமே 36 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
பேட்டிங் மட்டுமல்லாமல் மார்கஸ் ஸ்டாய்னிஸ் பந்துவீச்சிலும் அசத்தினார். அவர் 3 விக்கெட்டுகளை சுருட்டினார்.
மிட்செல் ஸ்டார்க், ஹேஸில்வுட், ஜாம்பா ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகளை சுருட்டி ஆஸி.,யின் வெற்றிக்கு பங்களித்தனர்.
மார்கஸ் ஸ்டாய்னிஸ் மேன் ஆஃப் தி மேட்ச் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
நாதன் எல்லிஸ் மற்றும் ஸ்டோனிஸ் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஓமனை 29/3 என்று பவர்பிளேயில் குறைத்தனர்.
அயன் கான் (36) மற்றும் மெஹ்ரான் கான் (27) ஆகியோர் எதிர்த்தாக்குதலை வழிநடத்த முயன்றனர் மற்றும் மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கினர். அழுத்தம் தொடர்ந்து அதிகரித்ததால், இருவரும் விரைவுபடுத்தினர், ஆனால் சற்று தாமதமாக தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.
முன்னதாக இன்னிங்ஸில், பேட்டிங் செய்ய வைக்கப்பட்ட பிறகு, ஆஸ்திரேலியா சற்று மந்தமான மேற்பரப்பில் 164/5 என்ற போட்டி இலக்கை வைக்க முடிந்தது.
டிராவிஸ் ஹெட் (12), மிட்செல் மார்ஷ் (14), கிளென் மேக்ஸ்வெல் (0) ஆகியோர் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினர். 9வது ஓவரில் மெஹ்ரான் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தபோது ஆஸ்திரேலியா கடும் சிக்கலில் இருந்தது.
ஆனால் ஸ்டோனிஸ் வந்து டேவிட் வார்னருடன் 102 ரன்களை இணைத்து ஆஸ்திரேலியாவை பாதுகாக்கக்கூடிய ஸ்கோருக்குத் வழிநடத்திச் சென்றார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்
"டி20 உலகக் கோப்பை 2024 ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை நடைபெறுகிறது. இந்திய நேரப்படி ஜூன் 2 ஆம் தேதி காலை 6 மணிக்குத் தொடங்குகிறது. இந்த முறை டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துகிறது, பெரும்பாலான போட்டிகள் காலை 6 மணி அல்லது இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. 2024 டி20 உலகக் கோப்பையில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இவை நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குரூப்பிலும் ஐந்து அணிகள் உள்ளன.
குரூப் A - இந்தியா, பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து, அமெரிக்கா
குரூப் B - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன்
குரூப் C - நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா, உகாண்டா
குரூப் D - தென்னாப்பிரிக்கா, இலங்கை, பங்களாதேஷ், நெதர்லாந்து, நேபாளம்
ஒவ்வொரு குரூப்பிலும்
ஒவ்வொரு குரூப்பிலும் உள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அனைத்து அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடுகிறது. அதாவது அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெறும் அணி அதிகபட்சமாக 8 புள்ளிகளைப் பெறும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு அணிகள் சூப்பர் 8 நிலைக்குச் செல்லும். சூப்பர் 8 இல் இரண்டு குழுக்கள் போட்டியிடும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.
டாபிக்ஸ்