Suryakumar Yadav: 15 ரன் போதும்! கோலியின் அல்டிமேட் சாதனையை சமன் செய்யும் சூர்யகுமார் யாதவ்
Dec 10, 2023, 05:56 PM IST
தென் ஆப்பரிக்காவுக்கு எதிராந முதல் டி20 போட்டியான இன்று இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், விராட் கோலியின் சாதனையை சமன் செய்ய வாய்ப்பு உள்ளது.
தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி டி20, ஒரு நாள், டெஸ்ட் என மூன்று வகை போட்டிகளிலும் விளையாடுகிறது. முதல் டி20 தொடர் தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி டர்பன் கிங்ஸ்மேட் மைதானத்தில் இன்று நடக்கிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி இந்த தொடரில் களமிறங்குகிறது. இந்திய டி20 அணியில் ஏற்கனவே தென் ஆப்பரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் வீரர்களாக ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் உள்பட சிலரே உள்ளனர்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உள்ளூரில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதையடுத்து அந்த தொடரில் இடம்பிடித்த அதே வீரர்கள் பெரும்பாலோனர், தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் உள்ளனர்.
இன்றைய போட்டியில் இந்திய அணி கேப்டனும், மிஸ்டர் 360 டிகிரி என அழைக்கப்படுபவருமான சூர்யகுமார் யாதவ் 15 ரன்கள் அடித்தால், சர்வதேச டி20 அரங்கில் 2 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் ஆவார்.
இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை அவர் சமன் செய்வார். அத்துடன் இருவரும் தங்களது 56வது சர்வதேச டி20 போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியவர்கள் என்ற பெருமையும் பெறுவார்கள்.
மூன்று பேட்ஸ்மமேன்கள் அவுட்டான பின் அணியில் பினஷராக களமிறங்கி இந்த சாதனையை சூர்யகுமார் நிகழ்த்த இருப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. சர்வதேச டி20 போட்டியில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்கள் கடந்தவர்கள் லிஸ்டில் பாகிஸ்தான் ஓபனர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் உள்ளனர். இருவரும் தங்களது 52வது போட்டியில் இதனை செய்துள்ளனர்.
டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் அடித்த ரன்களில் 60 சதவீதம் வரை மிடில் ஓவர்களில் அடிக்கப்பட்ட ரன்கள் ஆகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்