தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Hbd Suresh Raina: சர்வதேச கிரிக்கெட்டின் 3 வடிவங்களிலும் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் ரெய்னாவின் பிறந்த நாள் இன்று

HBD Suresh Raina: சர்வதேச கிரிக்கெட்டின் 3 வடிவங்களிலும் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் ரெய்னாவின் பிறந்த நாள் இன்று

Manigandan K T HT Tamil

Nov 27, 2023, 06:40 AM IST

google News
உள்நாட்டு கிரிக்கெட்டில் உத்தரபிரதேசத்துக்காக விளையாடினார். அவர் ஒரு ஆக்ரோஷமான இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆவார். (@Sivy_KW578)
உள்நாட்டு கிரிக்கெட்டில் உத்தரபிரதேசத்துக்காக விளையாடினார். அவர் ஒரு ஆக்ரோஷமான இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆவார்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் உத்தரபிரதேசத்துக்காக விளையாடினார். அவர் ஒரு ஆக்ரோஷமான இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆவார்.

சுரேஷ் ரெய்னா இந்திய முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆவார். இந்திய கிரிக்கெட் அணிக்கும், ஐபிஎல்-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் முதன்மை கேப்டன் இல்லாத போது ஸ்டாண்ட்-இன் கேப்டனாக செயல்பட்டிருக்கிறார். 

சுரேஷ் குமார் ரெய்னா உத்தரபிரதேசத்தின் முராத்நகரில் 27 நவம்பர் 1986 அன்று காஷ்மீரி பண்டிட் குடும்பத்தில் பிறந்தார். ரெய்னா காசியாபாத் நகரின் ராஜ்நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ் ரெய்னா என்ற மூத்த சகோதரர் உள்ளார். 

உள்நாட்டு கிரிக்கெட்டில் உத்தரபிரதேசத்துக்காக விளையாடினார். அவர் ஒரு ஆக்ரோஷமான இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆவார். அவ்வப்போது ஆஃப் ஸ்பின்னில் பந்துவீசவும் தவறியதில்லை. இந்தியாவுக்கு கேப்டனாக இருந்த இரண்டாவது இளம் வீரர் இவர். இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனாகவும் இருந்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் ரெய்னா. 

அவர் இந்திய அணியில் இருந்த காலத்தில், 2011 கிரிக்கெட் உலகக் கோப்பையையும் 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றார். ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற வரலாற்றை ரெய்னா படைத்தார், 2010 போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 101 ரன்கள் எடுத்தார்.

15 ஆகஸ்ட் 2020 அன்று, சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக ரெய்னா அறிவித்தார். தனிப்பட்ட காரணங்களால் 2020 இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து விலகினார். 6 செப்டம்பர் 2022 அன்று, ஐபிஎல் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் உட்பட அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஐபிஎல் 2010 இன் இறுதிப் போட்டிக்கு முன்னதாக பிசிசிஐயால் ரெய்னா "சிறந்த பீல்டர்" விருது பெற்றார்.

2021 ஆம் ஆண்டில், ஐபிஎல் வரலாற்றில் 200 போட்டிகளில் விளையாடிய நான்காவது வீரரானார் ரெய்னா, எம்எஸ் தோனி, ரோஹித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்குப் பிறகு இந்தச் சாதனையை ரெய்னா நிகழ்த்தினார்.

2022 ஐபிஎல் ஏலத்தில் அவர் விற்கப்படாமல் போனார். பின்னர் போட்டியின் வர்ணனையாளராக ஆனார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரெய்னா!

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி