தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Srilanka First Innings: 4 விக்கெட்டுகளை சாய்த்த ஆப்கன் இளம் பவுலர்- இலங்கை 241/10

Srilanka First Innings: 4 விக்கெட்டுகளை சாய்த்த ஆப்கன் இளம் பவுலர்- இலங்கை 241/10

Manigandan K T HT Tamil

Oct 30, 2023, 05:54 PM IST

google News
Srilanka vs Afghanistan: ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 242 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேஸிங் செய்யவுள்ளது. (AP)
Srilanka vs Afghanistan: ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 242 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேஸிங் செய்யவுள்ளது.

Srilanka vs Afghanistan: ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 242 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேஸிங் செய்யவுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், புனேவில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி டாஸ் வென்று இலங்கைக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்தார். முதலில் இலங்கை விளையாடியது.

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் அரையிறுதிக்குள் நுழைவதற்கான போட்டியில் இன்னும் உள்ளன, மேலும் அவர்களின் நம்பிக்கையை உயிர்ப்பிக்க அவர்களுக்கு ஒரு வெற்றி முக்கியமானது.

ரஷித் கான் தனது 100 வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ளார். முதலில் விளையாடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 241 ரன்களை எடுத்தது.

தொடக்க வீரர் பதும் நிசங்கா 46 ரன்களும், கேப்டன் குசல் மென்டிஸ் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

திமுத் கருணாரத்னே 15 ரன்களில் நடையைக் கட்டினார். சதீரா சமரவிக்ரம 36 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சரித் அசலங்கா 22 ரன்களில் கேட்ச் ஆனார்.

தனஞ்செய டி சில்வா (22 ரன்கள்), தீக்ஷனா (29 ரன்கள்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆப்கன் பவுலர் முஜீப் உர் ரஹ்மான் 10 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளையும், ரஷீத் கான் 10 ஓவர்களை வீசி 50 ரன்களை விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்.

ஃபஸல்ஹக் ஃபரூக் 10 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை தூக்கினார். ஒரு மெய்டன் ஓவர் உள்பட வெறும் 34 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 242 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேஸிங் செய்யவுள்ளது.

முன்னதாக, டாஸுக்குப் பின் ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிடி கூறுகையில், முதலில் பந்துவீச விரும்புகிறோம். “காரணம், அதற்குப் பிறகு பனி பெய்யும். நாங்கள் வசதியாக இருக்கிறோம், நாங்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடுகிறோம். இப்போது, நாங்கள் எப்படி நல்ல கிரிக்கெட்டை விளையாடப் போகிறோம் என்பதில் கவனம் செலுத்துகிறோம். நிபந்தனைகளின்படி, இன்று நூருக்கு ஓய்வு கொடுத்தோம். அவருக்குப் பதிலாக ஃபசல்ஹக் வருகிறார்” என்றார்.

ரஷித் கானுக்கு தற்போது 25 வயது ஆகிறது. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2015ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ODI இல் 170க்கும் அதிகமான விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

100வது ஆட்டத்தில் விளையாடுவதை யொட்டி அவருக்கு ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு ஷீல்டு, 100 எண் பொதித்த ஜெர்ஸி, கேப் ஆகியவை அளிக்கப்பட்டன. இதனால், அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி