தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Sreesanth: ‘ரிஷப் பந்த் தேவை..’ அடுத்த ஐசிசி உலகக் கோப்பைக்கான அணி பரிந்துரையை வெளியிட்ட ஸ்ரீசாந்த்

Sreesanth: ‘ரிஷப் பந்த் தேவை..’ அடுத்த ஐசிசி உலகக் கோப்பைக்கான அணி பரிந்துரையை வெளியிட்ட ஸ்ரீசாந்த்

Manigandan K T HT Tamil

Nov 22, 2023, 11:31 AM IST

google News
2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த ஐசிசி உலகக் கோப்பைக்கான இந்திய அணியை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தேர்வு செய்துள்ளார். (Getty Images-PTI)
2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த ஐசிசி உலகக் கோப்பைக்கான இந்திய அணியை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தேர்வு செய்துள்ளார்.

2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த ஐசிசி உலகக் கோப்பைக்கான இந்திய அணியை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தேர்வு செய்துள்ளார்.

அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தனது விருப்பமான இந்திய அணியை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தேர்வு செய்துள்ளார்.

ஒரு நாள் சர்வதேச (ODI) உலகக் கோப்பையில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்த பிறகு, பலரும் ஆஸி., அணியை வறுத்தெடுத்து வருகின்றனர்.

முதல் முறையாக டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. ஐசிசி உலக டி20 தொடரை அடுத்த ஆண்டு அமெரிக்கா நடத்தவுள்ளது.

அடுத்த ஆண்டு உலகக் கோப்பைக்கான அணியை முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் அறிவித்துள்ளார்.

ரோஹித் அல்லது ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்த அணி இருக்கும். 2022ல் ரோஹித்தின் தலைமையில் டி20 உலகக் கோப்பையில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. 

"ரோஹித் ஷர்மா விளையாடுவாரா இல்லையா என்பது பெரிய கேள்வி. அந்த ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் வென்றதால் அவர் கேப்டனாக இருப்பார். ரோஹித் சர்மா அல்லது ஹர்திக் இருக்க வாய்ப்புள்ளது. சூழ்நிலையைப் பொறுத்து யார் கேப்டனாவார்கள் என்பது முடிவாகும்" என்று ஸ்ரீசாந்த் ஸ்போர்ட்ஸ்கீடாவிடம் தெரிவித்தார்.

'மூன்றாவது கீப்பராக ரிஷப் பந்த் இருக்க வேண்டும்'

டி20 உலகக் கோப்பையில் மூன்றாவது விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் தேர்வு செய்யப்படுவார் என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் நம்புகிறார். கடந்த ஆண்டு ஒரு கடுமையான கார் விபத்தில் காயங்களுக்கு ஆளான பிறகு, ரிஷப் பந்த் இந்த உலகக் கோப்பை தொடரை தவறவிட்டார்.

“ரிஷப் பந்த், உடல்தகுதியுடன் இருந்தால், அடுத்த உலகக் கோப்பையில் மூன்றாவது கீப்பராக இருக்க வேண்டும், ஏனெனில் அவருக்கு மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்ப சிறிது நேரம் தேவைப்படலாம். நமக்கு ஒரு மேட்ச்-வின்னர் தேவை” என்று ஸ்ரீசாந்த் மேலும் கூறினார்.

ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், முகமது ஷமி, பும்ரா, ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் ஆகியோர் கொண்ட அணி சிறப்பாக இருக்கும் என கருதுவதாக ஸ்ரீசாந்த் தெரிவித்தார்.

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி