SA vs AUS: இரண்டு தொடர் தோல்விகள்! பின் ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை வென்ற தென் ஆப்பரிக்கா ஆஸியை பந்தாயது எப்படி?
Sep 18, 2023, 10:25 AM IST
வெற்றியாளர் என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை பவுலிங், பேட்டிங் என இரண்டிலும் சரணடையவைத்தது தென் ஆப்பரிக்கா அணி.
தென்ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இரு அணிகளும் 2-2 என வெற்றி பெற்றிருந்த நிலையில், சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் போட்டி ஜோகன்னஸ்பெர்கில் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென்ஆப்பரிக்கா அணி 315 ரன்கள் எடுத்தது. ஐடன் மார்க்ராம் 93, மில்லர் 63 ரன்கள் எடுத்தனர். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய மார்கோ ஜான்சென் 23 பந்துகளில் 57, ஆண்டிலே பெஹ்லுக்வாயோ 19 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து சேஸிங்கில் களமிறங்கிய ஆஸ்திரேலியா 193 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் மட்டும் அதிரடியாக பேட் செய்து 71 ரன்கள் எடுத்தார். பேட்டிங்கை போல் பவுலிங்கிலும் கலக்கிய ஜான்சென் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் 3-2 என்ற கணக்கில் தென்ஆப்பரிக்கா அணி தொடரை கைப்பற்றியது. ஆரம்பத்தில் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் படுதோல்வியடைந்தது தென் ஆப்பரிக்கா அணி. உலகக் கோப்பை தொடருக்கு முன் தென்ஆப்பரிக்கா அணியின் இந்த மோசமான ரசிகர்களுக்கு கவலை அளிப்பதாகவே இருந்தது.
இதைத்தொடர்ந்து மூன்றாவது போட்டியில் வெகுண்டெழுந்த தென்ஆப்பரிக்கா, 111 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
அதன் பின் நான்காவது போட்டியில் வரலாற்றில் இடம்பெறும் விதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தப் போட்டியில் கடைசி 10 ஓவரில் தென்ஆப்பரிக்காவின் ஹென்ரிச் கிளாசென் - டேவிட் மில்லர் இணைந்து 173 ரன்கள் குவித்தனர். இதுவே ஒரு நாள் போட்டியில் கடைசி 10 ஓவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையாக அமைந்தது.
இந்த போட்டியில் 416 ரன்கள் குவித்த தென்ஆப்பரிக்கா, ஆஸ்திரேலியாவை 252 ரன்களில் சுருட்டி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்கு கடைசி போட்டியிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றதுடன், சிறப்பான கம்பேக்கையும் கொடுத்துள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு முன் தென்ஆப்பரிக்காவுக்கு இந்த வெற்றி புதிய உற்சாகத்தை அளிக்கும் என நம்பலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்