IND vs SA Toss Report: டாஸில் ராசியில்லை.. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள்!
Jan 03, 2024, 01:09 PM IST
Rohit Sharma: இந்திய அணி முதலில் பந்துவீச உள்ளது.
முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது. இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் தொடங்குகிறது. 1 மணிக்கு டாஸ் போடப்பட்டது. தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ரோகித் கூறுகையில், "டாஸ் வென்றிருந்தால் நாங்களும் பேட்டிங் தேர்வு செய்திருப்போம். சவால் நிறைந்த ஆட்டம் தான். முன்பு நடந்ததை மறந்து தற்போதைய டெஸ்டில் கவனம் செலுத்துவோம். அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா இடம்பெற்றுள்ளார். பந்துவீச்சில் முகேஷ் சேர்க்கப்பட்டுள்ளார். ஷர்துல் தாக்குரை விளையாடவில்லை' என்றார்.
தென்னாப்பிரிக்கா மண்ணில் இதுவரை இந்திய அணியால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடரை ஜெயிக்க முடியவில்லை. 31 ஆண்டுகளாக தொடரும் சோகம் இந்த முறையும் நீடிக்கிறது.
தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணத்தின் கடைசி போட்டியான இதில் வென்றால், இந்தியா டெஸ்ட் தொடரை சமன் செய்யலாம். காயம் காரணமாக தென் ஆப்பரிக்கா கேப்டன் டெம்பா பவுமா இன்றைய போட்டியில் விளையாடமாட்டார்.
ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் ஸ்லோ ஓவர் ரேட்டுக்காக இந்தியாவுக்கு இரண்டு புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முன்னிலை பெற வேண்டுமானால் கேப்டவுனில் நடைபெறும் இன்றைய போட்டி முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பியது. அதைவிட மோசமாக இந்தியாவின் பவுலிங் அமைந்திருந்தது. அறிமுக வீரர் பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் இணைந்து 194 ரன்களை வாரி வழங்கினர்.
கடைசி டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் சதமடித்த அணியின் வெற்றிக்கு வித்திட்டார் எல்கார். பவுமா இல்லாத நிலையில் அவர்தான் கேப்டன் பொறுப்பை ஏற்கவுள்ளார். கடைசி டெஸ்ட் போட்டியில் கேப்டன்சி என்ற கூடுதல் பொறுப்புடன் களமிறங்கினாலும், அவரது பேட்டிங் பார்ம் இந்திய பவுலர்களுக்கு சவால் அளிப்பதாகவே இருக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9