தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Sa 2nd Innings: ‘மேட்ச்னா இப்டி இருக்கனும்': 6 விக்கெட் அள்ளிய பும்ரா!-இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்

SA 2nd Innings: ‘மேட்ச்னா இப்டி இருக்கனும்': 6 விக்கெட் அள்ளிய பும்ரா!-இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்

Manigandan K T HT Tamil

Jan 04, 2024, 04:12 PM IST

google News
2வது இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் முகமது சிராஜுக்கு 6 விக்கெட் கிடைத்தது (AP)
2வது இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் முகமது சிராஜுக்கு 6 விக்கெட் கிடைத்தது

2வது இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் முகமது சிராஜுக்கு 6 விக்கெட் கிடைத்தது

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா 6 விக்கெட்டுகளை தூக்கினார். முதல் இன்னிங்ஸில் சிராஜ் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய நிலையில், பும்ராவும் அதேபோன்று 6 விக்கெட்டுகளை எடுத்து அமர்க்களப்படுத்தியுள்ளார். தென்னாப்பிரிக்காவும் எய்டன் மார்க்ரம் சதம் விளாசினார்.

இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணி 176 ரன்களில் சுருண்டது.

79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடவுள்ளது. இன்றைய தினமே இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

மார்க்ரம் 100 ரன்களை எட்டிய போதும், டீன் எல்கர் அதை கொண்டாடினார். பிரியாவிடை டெஸ்டில் விளையாடிய தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர், தனது இருக்கையில் இருந்து எழுந்து ஆரவாரத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மார்க்ரமின் விக்கெட்டை சிராஜ் எடுத்தார். அவர் 106 ரன்கள் எடுத்திருந்தார்.

எல்கர் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். பும்ரா 13.5 ஓவர்கள் வீசி 61 ரன்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்தார்.

சிராஜுக்கு 1 விக்கெட் கிடைத்தது. முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட்டை எடுத்தார்.

இவ்வாறாக தென்னாப்பிரிக்கா தனது 2வது இன்னிங்ஸில் 176 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

மொத்தம் 36.5 ஓவர்களில் இந்த இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 79 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி இந்தியா விளையாடி வருகிறது.

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி