SA vs IND 1st Test Result: 3வது நாளில் முடிவுக்கு வந்த ஆட்டம்.. தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி
Dec 29, 2023, 09:29 AM IST
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியின் பந்துவீச்சு 400 ரன்கள் விக்கெட் அல்ல என்று கேப்டன் ரோஹித் சர்மா ஒப்புக்கொண்டார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி சரியாக பந்துவீசவில்லை என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
முதல் இன்னிங்ஸில் அந்த அணியின் பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சை அடுத்து, 185 ரன்கள் குவித்து டீல் எல்கரும் மிரட்டினார்.
தென்னாப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 408 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர், 163 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்தியா 2வது இன்னிங்ஸை தொடங்கியது. யஷஸ்வி 5 ரன்னிலும், கேப்டன் ரோகித் சர்மா ரன்கள் எதுவும் இன்றி க்ளீன் போல்டும் ஆனார்.
விராட் கோலி மட்டும் அரை சதம் விளாசி கவனம் ஈர்த்தார். அவரும் 76 ரன்களில் நடையைக் கட்டினார். கில் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய கே.எல்.ராகுல், இரண்டாவது இன்னிங்ஸில் 4 ரன்களில் நடையைக் கட்டினார். பர்கர் 4 விக்கெட்டுகளையும் மார்கோ ஜான்சர் 3 விக்கெட்டுகளையும் ரபாடா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். ஜஸ்ப்ரித் பும்ரா ரன் அவுட்டனார்.
இவ்வாறாக இன்னிங்ஸ் வெற்றி அடைந்தது தென்னாப்பிரிக்கா.
போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில், ரோஹித் கூறுகையில், "நாங்கள் சரியாக பந்து வீசவில்லை. இது 400 ரன்கள் விக்கெட் அல்ல. நாங்கள் நிறைய ரன்கள் கொடுத்தோம். ஒரு பவுலிங்கை அதிகம் நம்பி இருக்க முடியாது,மற்ற பவுலர்கள் தங்கள் வேலையை செய்ய வேண்டும். எதிரணியினர் பந்துவீசிய விதத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்" என்றார்.
கே.எல்.ராகுலின் சிறப்பான ஆட்டத்தை அவர் பாராட்டினார். முதல் இன்னிங்ஸில், இந்தியா தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தபோது, ராகுல் துணிச்சலை வெளிப்படுத்தி சதம் அடித்து இந்தியாவின் ஸ்கோரை 245 ஆக உயர்த்தினார் என்றார் ரோகித்.
முதல் இன்னிங்ஸில் முழுக்க முழுக்க தென்னாப்பிரிக்கா ஆதிக்கம் செலுத்தியது. ரபாடாவின் 5 விக்கெட்கள் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. கே.எல்.ராகுல் 101 ரன்கள் எடுத்தார், ஆனால் எல்கரின் அற்புதமான 185 ரன்களால் அது விரைவில் மறைக்கப்பட்டது.
3-வது நாள் ஆட்டத்தில், நந்த்ரே பர்கர் தனது அபார பவுன்சர்கள் மற்றும் துல்லியமான லைன் மற்றும் லென்த் பந்துவீச்சால் இந்திய பேட்ஸ்மேன்களை திணறினர்.
நான்காம் நாள் ஆட்டத்தை நோக்கிச் செல்வதாகத் தோன்றிய ஆட்டம் மூன்றாவது நாளிலேயே முடிவடைந்தது. ககிசோ ரபாடா, மார்கோ ஜான்சன் மற்றும் பர்கர் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியாவின் ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையையும் காலி செய்தனர்.
2-வது இன்னிங்ஸில் மோசமான தொடக்கத்தை பெற்ற தென்னாப்பிரிக்கா, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுலை அடுத்தடுத்து வெளியேற்றி இந்தியாவை கடுமையாக அச்சுறுத்தியது.
ரவிச்சந்திரன் அஸ்வினை டக் அவுட்டாக்கிய பிறகு, இந்தியா ஆட்டமிழந்துவிடும் என ரசிகர்கள் தலைமீது கைவிக்க தொடங்கிவிட்டனர். ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார் டீன் எல்கர். 2வது டெஸ்ட் ஜனவரி 3ம் தேதி தொடங்குகிறது.