தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Hbd Quinton De Kock: தென் ஆப்பரிக்காவின் முன்னாள் அதிரடி ஓபனர், சரவெடி விக்கெட் கீப்பர் டி காக் பிறந்தநாள் இன்று

HBD Quinton de Kock: தென் ஆப்பரிக்காவின் முன்னாள் அதிரடி ஓபனர், சரவெடி விக்கெட் கீப்பர் டி காக் பிறந்தநாள் இன்று

Dec 17, 2023, 05:45 AM IST

google News
மிக குறுகிய காலமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியனாலும் தனது அதிரடியான ஆட்டம் போலவே பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தியவர் குவன்டைன் டி காக்.
மிக குறுகிய காலமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியனாலும் தனது அதிரடியான ஆட்டம் போலவே பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தியவர் குவன்டைன் டி காக்.

மிக குறுகிய காலமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியனாலும் தனது அதிரடியான ஆட்டம் போலவே பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தியவர் குவன்டைன் டி காக்.

தென் ஆப்பரிக்கா அணிக்காக டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை போட்டிகளிலும் விளையாடியவரும், அணியின் கேப்டனாக பல வெற்றிகளை பெற்று தந்ததுடன், சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் ஜொலித்தவர் குவன்டைன் டி காக். சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு பெறப்போவதாக கூறி, அதை செய்தும் உள்ளார். 30 வயதே ஆகும் அவர் ஓய்வை அறிவித்தது பலருக்கும ஆச்சர்யம் தரும் விஷயமாகவே உள்ளது. ஆனாலும் அவர் தனது முடிவிலிருந்து பின் வாங்கவில்லை.

தென் ஆப்பரிக்கா உள்ளூர் கிரிகெட்டில் விளையாடி வரும் டி காக், ஐபிஎல் தொடரில் தற்போது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். உள்ளூர் கிரிக்கெட், பிரான்சைஸ் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்த டி காக் தேசிய அணியில் விளையாடும் வாய்பை பெற்றார்.

முதலில் டி20 வீரராக 2012இல் அறிமுகமான இவர், பின்னர் ஒரு நாள், டெஸ்ட் வீரராக அடுத்தடுத்த ஆண்டுகளில் உருமாறினார். விக்கெட் கீப்பரான இவர் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனாக தெறிக்கவிடும் அதிரடி ஓபனிங்கை தந்து ரன்குவிப்பில் ஈடுபட்டு வந்தார். இதனால் அரைசதம், சதம் என அடுத்தடுத்து அடித்து உலகையே திரும்பி பார்க்க வைத்தார்.

74 போட்டிகளில் 12 சதங்களை அடித்து, தென் ஆப்பரிக்கா முன்னாள் வீரர் ஹாசிம் ஆம்லா 81 போட்டிகள் செய்ததை முன் கூட்டியே செய்து சாதித்தார்.

கிரிக்கெட் தென் ஆப்பரிக்காவின் சிறந்த கிரிக்கெட்டர் விருதை வென்ற டி காக், அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். ஆயிரம் ரன்களை விரைவாக கடந்த தென் ஆப்பரிக்கர் என்ற பெருமை இவர் வசம் உள்ளது.

47 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர், ஆஸ்திரேலியா வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையை முறியடித்தார். ஐபிஎல் கிரிக்கெட்டை பொறுத்தவரை சன் ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு, மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு விளையாடியுள்ளார். தற்போது லக்னோ ஜெயிண்ட்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பரிக்கா கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவரும், தற்போது பிரான்சைஸ் கிரிக்கெட்டில் மிகவும் டிமாண்டான வீரராகவும் இருந்து வரும் குவன்டைன் டி காக்குக்கு இன்று பிறந்தநாள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி