South Africa 1st Innings: ‘கலக்கிட்டிங்க சிராஜ்..’-தொடங்கிய வேகத்தில் முடிவுக்கு வந்த SA முதல் இன்னிங்ஸ்!
Jan 03, 2024, 03:54 PM IST
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக மிகவும் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனையை படைத்தது தென்னாப்பிரிக்கா.
முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது. இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா ஆரம்பம் முதலே தடுமாறியது.
எய்டன் மார்க்ரம் சிராஜ் பந்துவீச்சில் 2 ரன்கள் எடுத்திருந்போது ஆட்டமிழந்தார்.
அடுத்து கேப்டன் டீன் எல்கர் விக்கெட்டையும் சிராஜ் தட்டித் தூக்கினார். பும்ரா பந்துவீச்சில் டிரிஸ்டியன் ஆட்டமிழந்தார். சரசரவென விக்கெட்டுகள் வீழ்ந்தன.
இன்றைய ஆட்டத்தில் குறுகிய நேரத்தில் 6 விக்கெட்டுகளை அள்ளினார். பும்ரா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அஸ்வினுக்கு பதிலாக ஆட்டத்தில் சேர்க்கப்பட்ட முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளை தூக்கினார். இவ்வாறாக தொடங்கிய வேகத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்களில் ஆல் அவுட் ஆனது தென்னாப்பிரிக்கா.
தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா காயத்தால் வெளியேறியதை அடுத்து தென்னாப்பிரிக்கா 10 வீரர்களாக குறைந்த போதிலும், அந்த அணி மூன்று நாட்களில் தொடரை முடித்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. ஸ்லோ ஓவர் ரேட்டை மெயின்டெயின் செய்ததற்காக இரண்டு டபிள்யூ.டி.சி புள்ளிகளைப் பெற்றதால், முதலிடத்திலிருந்து ஆறாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதால் இந்தியாவுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டது. குறைந்தபட்சம் தென்னாப்பிரிக்காவில், இந்தியா தனது இரண்டாவது மற்றும் கடைசி போட்டியை கேப்டவுனில் விளையாடுகிறது.
முன்னதாக, ரோகித் கூறுகையில், "டாஸ் வென்றிருந்தால் நாங்களும் பேட்டிங் தேர்வு செய்திருப்போம். சவால் நிறைந்த ஆட்டம் தான். முன்பு நடந்ததை மறந்து தற்போதைய டெஸ்டில் கவனம் செலுத்துவோம். அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா இடம்பெற்றுள்ளார். பந்துவீச்சில் முகேஷ் சேர்க்கப்பட்டுள்ளார். ஷர்துல் தாக்குரை விளையாடவில்லை' என்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9