Mohammed Siraj: 'பிளேயர் ஆஃப் தி மேட்ச்' பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்கு வழங்கிய சிராஜ்
Sep 17, 2023, 10:41 PM IST
மொஹமட் சிராஜ் தனது 'பிளேயர் ஆஃப் தி மேட்ச்' ரொக்கப் பரிசை கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாச மைதானத்தில் மைதான வீரர்களுக்கு அர்ப்பணித்தார். மைதான ஊழியர்களுக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மூலம் $50,000 பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஞாயிற்றுக்கிழமை தனது ஆட்டநாயகன் ரொக்கப் பரிசான 5,000 டாலர்களை மழையால் பாதிக்கப்பட்ட ஆசியக் கோப்பையின் மூலம் அயராது உழைத்த இலங்கை மைதான ஊழியர்களுக்கு வழங்கினார்.
ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ், இலங்கையின் டாப் ஆர்டரைப் பிரமிக்க வைக்கும் வகையில் பந்துவீசினார். இவரது பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல், வரிசையாக வீரர்கள் ஆட்டமிழந்தனர். 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் முகமது சிராஜ்.
ஆட்டநாயகன் விருதுக்கு இவரே தேர்வு செய்யப்பட்டார். பெரிய மனதுடன் ‘பிளேயர் ஆஃப் தி மேட்ச்’-இல் வென்ற ரொக்கப் பரிசை மைதான ஊழியர்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். 5,000 டாலர்கள் பெறுமதியை மைதானத்தின் ஊழியர்களுக்கு வழங்கினார் சிராஜ்.
சிராஜ் ஏழு ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார், இது ஒருநாள் போட்டிகளில் அவரது சிறந்த ஆட்டமாகும். வெறும் 21 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
இதற்கிடையில், போட்டி முடிந்து, ஆசியாவின் சாம்பியனாக இந்தியா உருவெடுத்த பிறகு, ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்ட முகமது சிராஜ் கூறுகையில், "நீண்ட காலமாக நன்றாகப் பந்துவீசுகிறேன். ஆனால், இன்று தான் அதற்கான பலன் கிடைத்தது. இன்று ஸ்விங் கிடைத்தது.ஸ்விங்கின் காரணமாக முழுமையாக பந்துவீசுவேன் என்று நினைத்தேன். வேகப்பந்து வீச்சாளர்களிடையே நல்ல பிணைப்பு இருக்கும் போது அது அணிக்கு உதவியாக இருக்கும் என நினைத்தேன். மைதான ஊழியர்கள் இல்லாமல் இந்தப் போட்டி நடந்திருக்காது. எனவே இந்தத் தொகையை அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்." என்றார்.
முன்னதாக, அயராது உழைத்த மைதான பணியாளர்களுக்கு 50,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்