தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Sa Vs Ind 2nd Odi: டாஸ் வென்றது தென் ஆப்பிரிக்கா.. இந்திய Odi அணியில் அறிமுகமான இளம் வீரர்!

SA vs IND 2nd ODI: டாஸ் வென்றது தென் ஆப்பிரிக்கா.. இந்திய ODI அணியில் அறிமுகமான இளம் வீரர்!

Manigandan K T HT Tamil

Dec 19, 2023, 04:13 PM IST

google News
முதல் ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி கண்டது.
முதல் ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி கண்டது.

முதல் ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி கண்டது.

தென்னாப்பிரிக்காவின் Gqeberha-இல் நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் இந்தியா பேட்டிங் செய்யவுள்ளது. இன்றைய ஆட்டத்தில் ரிங்கு சிங் அறிமுகமானார். odi இல் இந்திய அணிக்காக முதல்முறையாக களமிறங்குகிறார் ரிங்கு சிங்.

இவருக்கு சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் தொப்பியை வழங்கினார்.

டி20 தொடர் 1-1 என்ற சமன் ஆன நிலையில், ஒரு நாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்றைய 2வது ODI இல் வெற்றி பெற்றால் அணி தொடரைக் கைப்பற்றிவிடும்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை சாய்த்தார், சாய் சுதர்சனும் தனது முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்தார். அவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும் தூக்கினார்.

116 ரன்களில் தென்னாப்பிரிக்காவை சுருட்டியது இந்தியா. பின்னர் எளிய இலக்கை 16.4 ஓவர்களில் எட்டிப் பிடித்தது இந்தியா.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது ஒருநாள் போட்டி பல மொழிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்திய பார்வையாளர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளம் மூலம் போட்டியை நேரலையில் கண்டு ரசிக்கலாம்.

இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இதுவரை 92 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன, தென்னாப்பிரிக்கா 50 வெற்றிகளையும் இந்திய அணி 39 வெற்றிகளையும் பெற்றுள்ளன. 3 போட்டிகளில் முடிவு இல்லை. தற்போது இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

Gqeberha இல் மற்றொரு வெற்றியுடன் தொடரை இந்திய அணி ஆர்வமாக உள்ளது. கே.எல்.ராகுலும் அவரது வீரர்களும் ஒருநாள் தொடரை வெல்வதை எதிர்நோக்கியுள்ள நிலையில், மற்றொரு நேர்மறையான முடிவைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளனர். தென்னாப்பிரிக்காவைப் பொறுத்தவரை, ஜோகன்னஸ்பர்க்கில் சரணடைந்த நிலையில் இருந்து முன்னேறி, இந்தப் போட்டியில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே திட்டமாக இருக்கும்.

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி