தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Kl Rahul: ‘அவருக்கு இந்த சூழ்நிலைக்கு ஏத்த மாறி விளையாடத் தெரியும்’-ரோகித் சர்மா

KL Rahul: ‘அவருக்கு இந்த சூழ்நிலைக்கு ஏத்த மாறி விளையாடத் தெரியும்’-ரோகித் சர்மா

Manigandan K T HT Tamil

Dec 26, 2023, 11:25 AM IST

google News
IND vs SA 1st test: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் வழக்கத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ரோலை முயற்சிக்க உள்ளார். (PTI)
IND vs SA 1st test: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் வழக்கத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ரோலை முயற்சிக்க உள்ளார்.

IND vs SA 1st test: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் வழக்கத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ரோலை முயற்சிக்க உள்ளார்.

கேஎல் ராகுல் இதுவரை 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2642 ரன்கள் மற்றும் 7 சதங்கள் அடித்துள்ளார். அதில் 6 சதங்கள் வெளிநாட்டு மண்ணில் பதிவு செய்தது, அவற்றில் ஒன்று தென்னாப்பிரிக்காவில் பதிவு செய்த சதம்.

இருப்பினும், செஞ்சூரியனில் முதல் டெஸ்ட் போட்டியில் தனது 48 வது டெஸ்டில், ராகுல் முற்றிலும் புதிய ரோலில் முயற்சிக்க உள்ளார்.  கே.எல். ராகுல் இந்த தொடருக்கான இந்தியாவின் நியமிக்கப்பட்ட விக்கெட் கீப்பர் ஆவார். மேலும் ராகுல் ஒருநாள் போட்டிகளில் 5-வது வீரராக பேட்டிங் செய்து தனது விக்கெட் கீப்பிங்கிற்காக பாராட்டுகளைப் பெறுவதைக் கருத்தில் கொண்டு, அணி நிர்வாகம் டெஸ்ட் போட்டிகளிலும் அதையே எதிர்பார்க்கிறது.

"ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் ஏதாவது ஒரு மாற்றத்தை சந்திக்க வேண்டும், தங்கள் வாழ்க்கையில் வித்தியாசமான ரோலை முயற்சிக்க வேண்டும். ஒரு பொசிஷனில் மட்டுமே நிலைத்து விளையாடிய வீரர்கள் மிகக் குறைவு" என்று இந்த போட்டியில் ராகுல் மேற்கொள்ளும் மாற்றம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது ரோஹித் கூறினார்.

2023 உலகக் கோப்பையில் ராகுலின் விக்கெட் கீப்பிங் பாராட்டப்பட்டது. மிடில் ஆர்டரில் 11 போட்டிகளில் விளையாடி 75.33 சராசரியுடன் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள், ஒரு சதம் உட்பட 2 அரைசதங்களுடன் 452 ரன்கள் குவித்துள்ளார்.

உலகக் கோப்பையில் அவர் ஆடிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உணர்ந்தேன். அவர் மிகவும் கடினமாக உழைத்து வருகிறார், அவரும் அந்த பாத்திரத்தை ஏற்க மிகவும் ஆர்வமாக உள்ளார். அந்த பொசிஷன் எதுவாக இருந்தாலும் சிறப்பாக செயல்படுவார்"என்று ரோஹித் கூறினார்.

தென்னாப்பிரிக்காவில் மிடில் ஆர்டரில் விளையாடிய ராகுலின் அனுபவத்துடன் இந்தியாவின் பேட்டிங் வரிசை மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்றும் ரோஹித் கூறினார். இந்த சூழ்நிலையில் விளையாடிய அனுபவம் அவருக்கு உள்ளது, கடந்த முறை இங்கு வந்து சதம் அடித்தார். அந்த நேரத்தில் அவர் இன்னிங்ஸை ஓபனிங் பேட்ஸ்மேனாக தொடங்கினார், ஆனால் இந்த முறை, அவர் மிடில் ஆர்டரில் இருப்பார். ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் பேட்டிங் செய்யும் நிலையில், அவர் பெரும்பாலான விஷயங்களை சரியாக செய்கிறார் என்பதை நாம் பார்த்தோம். அவர் பேட்டிங் செய்து ஆட்டத்தை நன்கு புரிந்து கொள்கிறார். அனுபவம் வாய்ந்த வீரரான இவருக்கு ஆட்டத்தின் பல்வேறு கட்டங்களில் என்ன தேவை என்பது நன்றாகவே தெரியும். ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் மிடில் ஆர்டரில் வருவது எங்களுக்கு ஒரு திடமான சமநிலையை அளிக்கிறது, இது நல்லதுதான். ஆனால் அவர் எவ்வளவு காலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் ரோலை செய்வார் என்று எனக்குத் தெரியவில்லை. இப்போதைக்கு அவர் அந்த ரோலை ஏற்க மிகவும் ஆர்வமாக உள்ளார், "என்று ரோஹித் கூறினார்.

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி