Ashwin Return to ODI: அஸ்வினுக்கு இந்திய அணியில் வாய்ப்பு! ஆனால்..இது நடந்தால் மட்டுமே - ரோஹித் ஷர்மா சர்ப்ரைஸ்
Sep 18, 2023, 11:25 AM IST
உலகக் கோப்பை தொடரில் பவுலிங் ஆல்ரவுண்டராக ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம்பெறுவதற்கான சூழல் உருவாகியுள்ளதாக இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா சர்ப்ரைஸ் தகவலை தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடர் அணியில் இடம்பிடித்திருக்கும் பவுலிங் ஆல்ரவுண்டரான அக்ஷர் படேலுக்கு இடது காலில் தசை பிளவு ஏற்பட்டுள்ளது. எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்ததில் காயம் ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
எனவே அவர் அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற இருக்கும் முதல் இரண்டு ஒரு போட்டியில் பங்கேற்கமாட்டார் என தெரிகிறது. அவர் அணியில் இடம்பிடிக்காத பட்சத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் அவரது இடத்தில் அணியில் சேர்க்கலாம் என முடிவெடுத்துள்ளோம்.
தற்போது காயமடைந்திருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு முன் முழுமையாக குணமடைந்து, பிட்டாகி விடுவார் என நம்புகிறோம்.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், அக்ஷர் படேலுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அழைக்கப்பட்டபோதிலும், அஸ்வினுக்கு உலகக் கோப்பை தொடர் விளையாடுவதற்கான வாய்ப்பு போயிவிட்டது என்ற அர்த்தமில்லை.
அஸ்வின் எந்நேரமும் அழைக்கப்படாலம். இதுபற்றி அவரிடம் நான் போனில் பேசியுள்ளேன். கடைசி நேரத்தில் தான் அக்ஷர் படேலுக்கு காயமடைந்துள்ளது. அப்போது வாஷிங்டன் சுந்தர் விளையாட தயார் நிலையில் இருந்ததால், அவர் அணியில் சேர்க்கப்பட்டு பங்களிப்பும் அளித்தார்.
ஆசிய விளையாட்டு அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்திருப்பதால் நன்கு பிட்டாக இருந்தார். அணியில் ஒவ்வொரு வீரரும் எந்தெந்த பணியில் செயல்படுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெளிவாக உள்ளது.
தற்போது அக்ஷர்க்கு ஏற்பட்டிருக்கும் காயம் இன்னும் 10 நாள்களிலும் குணமாகலாம். சிலருக்கு விரைவாக கூட குணமடையலாம். எனவே பொறுத்திருந்து பார்ப்போம்."
இவ்வாறு அவர் கூறினார்.
அக்ஷர் படேலுக்கு பதிலாக அழைக்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர், நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். ஆனால் துர்தஷ்டவசமாக பவுலிங், பேட்டிங் செய்யவில்லை. மாறாக பீல்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளித்தார்.
அதேபோல் ரவிச்சந்திரன் அஸ்வினை பொறுத்தவரை கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரியில் தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடினார். இதன் பிறகு அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அழைக்கப்பட்டால் 18 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு நாள் போட்டியில் பங்கேற்பார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்