Eng vs Ind 3rd Test: தோனி, கங்குலி சாதனையை தகர்த்த ரோகித் சர்மா
Feb 15, 2024, 05:02 PM IST
Rohit sharma: ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில் ரோஹித் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
ராஜ்கோட்: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்தில் உள்ளார்.
ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில் ரோஹித் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
இந்த போட்டியில், ரோஹித் 196 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 131 ரன்கள் எடுத்து தனது 11 வது டெஸ்ட் சதத்தை அடித்தார். அவரது ரன்கள் 66.83 ஸ்ட்ரைக் ரேட்டில் வந்தது.
இப்போது 470 சர்வதேச போட்டிகளில், ரோஹித் 43.35 சராசரியுடன் 18,641 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணிக்காக 47 சதங்கள், 100 அரைசதங்கள் அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் (34,357 ரன்கள்), விராட் கோலி (26,733 ரன்கள்), ராகுல் டிராவிட் (24,064 ரன்கள்) இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை வகிக்கின்றனர்.
57 டெஸ்ட் போட்டிகளில், ரோஹித் 11 சதங்கள் மற்றும் 16 அரைசதங்களுடன் 45.49 சராசரியாக 3,958 ரன்கள் எடுத்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 212 ஆகும்.
262 ஒருநாள் போட்டிகளில், ரோஹித் 31 சதங்கள் மற்றும் 55 சதங்களுடன் 49.12 சராசரியாக 10,709 ரன்கள் எடுத்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 264 ஆகும். அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் பட்டியலில் ரோஹித் 5-வது இடத்தில் உள்ளார்.
ரோஹித் 31.79 சராசரியுடனும் 139 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 3,974 ரன்கள் குவித்துள்ளார். 5 சதங்களும், 29 அரைசதங்களும் அடித்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 121*. டி20 வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் மற்றும் அந்த வடிவத்தில் அதிக சதங்கள் அடித்த சாதனையையும் அவர் வைத்துள்ளார்.
தனது மூன்று சிக்ஸர்களுடன், ரோஹித் புகழ்பெற்ற விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் மற்றும் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியையும் முந்தினார், மொத்தம் 80 சிக்ஸர்களுடன் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் இரண்டாவது அதிக சிக்ஸர் அடித்த வீரர் ஆனார். டெஸ்ட் போட்டிகளில் வீரேந்திர சேவாக் 90 சிக்ஸர்களுடன் அதிக சிக்ஸர்கள் அடித்துள்ளார். இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 128 சிக்ஸர்களுடன் டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக உள்ளார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இங்கிலாந்து: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் போக்ஸ் (விக்கெட் கீப்பர்), ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ரஜத் படிதார், சர்பராஸ் கான், ரஜந்திர ஜடேஜா, துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
டாபிக்ஸ்