Rishabh Pant: ஐபிஎல் 2024 சீசனில் விளையாடுகிறேனா? முக்கிய தகவலை பகிர்ந்த ரிஷப் பண்ட்
Dec 20, 2023, 05:35 PM IST
ரிஷப் பண்ட் 100 சதவீதம் பிட்னஸுடன் ஐபிஎல் தொடரில் இடம்பிடித்தால் 2022 வங்கதேச தொடருக்கு பின்னர் முழுமை ஒரு ஆண்டு இடைவெளிக்கு பின் பங்கேற்கும் தொடராக அமையக்கூடும்.
ஐபிஎல் 2024 தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற்று முடிந்துள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகளும் தங்களது அணிக்கு தேவையான பேட்ஸ்மேன்கள், பவுலர்கள், ஆல்ரவுண்டர்களை ஏலம் எடுத்து பலப்படுத்தியுள்ளன.
மினி ஏலத்துக்கு பின்னர் ஒவ்வொரு அணியும் தங்களது அணிகளை முழுமையாக கட்டமைத்து வீரர்களின் லிஸ்டை வெளியிட்டுள்ளன. இதையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனும், முக்கிய வீரருமான ரிஷப் பண்ட் ஐபிஎல் 2024 தொடரில் விளையாடுவாரா என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், பிற அணிகளின் மத்தியிலும் எழும் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்து வருகிறது.
இதற்கிடையே டெல்லி கேபிடல்ஸ் இயக்குநரான செளரவ் கங்குலி தலைமையில் கொல்கத்தாவில் நடைபெற்ற அணி தொடர்பான முகாமில் தென்பட்டார் ரிஷப் பண்ட். இந்த முகாமில் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், உதவி பயிற்சியாளர் ப்ரவீன் ஆம்ரே ஆகியோரும் உடன் இருந்தனர். இந்த சம்பவம் கடந்த மாதம் நடந்த நிலையில், ரிஷப் பண்ட் ஐபிஎல் 2024 தொடரில் விளையாட தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்த சூழ்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி இந்த முறை ரிஷப் பண்ட்-ஐ களமிறக்க தயாராகி இருப்பதாகவும், அவர் பேட்ஸ்மேன் கம் கேப்டனாக செயல்பட வைக்க திட்டமிட்டிருப்பதாகவும் பிரபல ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
மினி ஏலத்தை முன்னிட்டு, ஐபிஎல் 2024 சீசன் மூலம் கிரிக்கெட் விளையாட்டில் கம்பேக் தர இருப்பது குறித்து பண்ட் பிரபல ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், " நான் இப்போது முன்பைவிட நலமாக இருக்கிறேன். இன்னும் 100 சதவீதம் முழுமையாக குணமடையவில்லை. ஆனால் இன்னும் சில மாதங்களில் அதை செய்வேன் என நம்புகிறேன்.
விபத்து நிகழ்ந்தது படுக்கையில் இருந்தது கடினமான காலங்கள். அந்த நேரத்தில் மக்கள் என் மீது வைத்திருக்கும் அன்பும், மதிப்பும், என மீது சிலருக்கு இருந்த பைத்தியக்காரதனமும் என்னை நெகிழ்ச்சியடைய வைத்தது. அதுவே என்னை விரைவில் குணமடைய செய்ய உதவியது" என்றார்.
பண்ட் பேட்டியளித்த விடியோவை டெல்லி கேப்டல்ஸ் நிர்வாகம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதேபோல் ஐபிஎல் 2024 தொடரில் பண்ட் விளையாடுவது குறித்து அணி நிர்வாகம் சர்ப்ரைசாக அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஐபிஎல் 2024 சீசனில் பண்ட் விளையாடும்பட்சத்தில், 2022 வங்கதேச தொடருக்கு பின் முழுமையாக ஓர் ஆண்டுகள் கழித்து பண்ட் கிரிக்கெட் ஆக்ஷனில் திரும்புவார்.
முன்னதாக, டிசம்பர் 2022 இறுதியில் சாலை விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், சுமார் ஒரு வாரத்துக்கும் மேலாக மருத்துவமனையல் சிகிச்சை பெற்று மறு பிறவி எடுத்தார். இதன் பிறகு மெல்ல மெல்ல ஊன்றுகோல் உதவியுடன் நடக்க தொடங்கிய பண்ட், தற்போது கிரிக்கெட் விளையாடும் அளவில் உடல்நிலை தேறியுள்ளார்.
பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் புத்துணர்வு முகாமில் இருந்து வருகிறார் பண்ட்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்